Translate

Tuesday, 3 July 2012

மேனனின் பயணம் வெற்றி தரவில்லை;மனம் திறக்கிறார் இந்திய அதிகாரி


மேனனின் பயணம் வெற்றி தரவில்லை;மனம் திறக்கிறார் இந்திய அதிகாரி

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இலங்கை ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் குறிப்பிட்ட காலவரம்புக்குள் அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த அவர்களின் எதிர்காலத் திட்டம் குறித்த தெளி வான கருத்தைப் பெறாமலே நாடு திரும்பியுள்ளார்.

 
இவ்வாறு மேனனுடன் கொழும்பு வந்து டில்லி திரும்பிய இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.மேனனின் பயணம் பெரியளவில் வெற்றிகரமானதாக அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
சிவ்சங்கர் மேனனுடன் கொழும்புக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்த அதிகாரி, கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவு டில்லி திரும்பிய பின்னர் நேற்றுமுன்தினம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
 
இனப்போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கழிந்த பின்னரும், உண்மையான அரசியல் நல்லிணக்கத்தை அடைவதற்கு கொழும்பு இன்னமும் ஏற்புடைய திட்டம் ஒன்றைக் கொண்டிருக்கவில்லை என்ற உள்ளுணர்வு டனேயே மேனனும் அவரது குழுவினரும் டில்லி திரும் பியுள்ளனர். அவர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்துப் பேசினார்கள். ஆனால், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று கூறவில்லை.
 
இன்னொரு மொழியில் சொல்வதானால், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், எப்போது செய்யப் போகி றார்கள் என்ற திட்டத்தை தெளிவாகச் சொல்லத் தயங்குகிறார்கள்.மேனனின் பயணம் பெரியளவில் வெற்றிகரமானதாக அமைய வில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

No comments:

Post a Comment