அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியப் புள்ளி கருத்துக்கள்(Points). உணர்வுக்கு அடிமைப்படாமல் அறிவுபூர்வ விவாதத்திற்கே இது பயன்பட வேண்டும். இல்லையெனில் இது விரயமாக நேரத்தை செலவிட்டதாகிவிடும்.
1. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சிக்கல்களையும் , இந்தியா மற்றும் சீனா சர்வதேச பொருளாதார எஞ்ஜீன்களாக வளர்ந்து வருவதையும் கணக்கில் கொண்டாக வேண்டும்.
2. தாம் ஆதரிக்கும் பிரச்சினைகளை தமது நலன்களுக்கான பேரங்களாகப் பயன்படுத்தி தம்மை நம்பியவரைக் காவு கொடுக்கும் மேற்கத்திய அரசுகளின் வரலாறுகளை மறக்கலாகாது.
3. இந்திய எதிர்ப்புப் போக்கைப் பயன்படுத்தி சீனா இலங்கையில் வேகமாகக் காலூன்றி வருவதையும் புறக்கணிக்கலாகாது. இப்போக்கு வளருமானால் அடுத்த இந்திய-சீனப் போர்க்களமாக இலங்கை மாறி, தமிழ்-சிங்கள வேறுபாடின்றி அழிவில் ஒன்றுபடும் வாய்ப்பு இருப்பதையும் புறக்கணிக்கலாகாது.
4. அய்.நாவில் ராஜபட்சேயின் பாதுகாவலானாக சீனா செயல்படும் வரை போர்க்குற்றம் பற்றிய உருப்படியான நடவடிக்கைக்கு சாத்தியமில்லை. இது வரை இந்தியாவைக் கண்டிக்கும் வேகத்தில் சிறிதளவிலாவது சீனாவை வி.பு ஆதரவு அமைப்புகள் ஏன் கண்டிக்கவில்லை என்பதும் ஆய்விற்குரியது. முள்ளீ வாய்க்கால் அழிவிற்கு முன்னரே சீன-இலங்கை ஒப்பந்தங்கள் கையுழுத்தானது. ஆக விடுதலைப் புலிகள் அழிவு பற்றி சீனாவிற்கு முன்கூட்டியே தெரிந்திருந்ததற்கு இது சாட்சியமாகிறது.
5. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று வரிகளின்படி , விடுதலைப் புலி அமைப்பினரும் , தமிழ்நாட்டில் வி.பு ஆதரவாளர்களும் தமது பக்கமுள்ள தவறுகளை ஆக்கபூர்வமான திறந்த விமர்சனத்திற்கு உட்படுத்தி உரிய பாடங்கள் கற்று செயல்படுத்தாத வரை இனச்சிக்கல் புரையோடுவது அதிகரிக்கவே செய்யும். . தமிழ்நாட்டில் 1983 சூலை இனப்படுகொலைக்குப் பின் சராசரி தமிழர்கள் தாமாகவே வெகுண்டெழுந்தார்கள். இயல்பு வாழ்க்கை பல நாட்கள் பாதிக்கப்பட்டது. யாரும் அதற்காகக் கோபப்படவில்லை.ஆனால் இறுதிக்கட்டப் போரின் போதும், முள்ளிவாய்க்கால் அழிவின் போதும் , சராசரித்தமிழர்கள் அது பற்றி பெரிய கவலையின்றி தத்தம் வாழ்க்கை பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காத வகையிலேயே ( பொது மக்களின் கோபத்தை சம்பாதிக்காமல்) விபு ஆதரவு போராட்டங்கள் நடந்தன. இந்த வேறுபாட்டிற்கான காரணங்கள் ஆய்விற்குரியதாகும்.
6. உலகில் உள்ள தனிநாடுகளின் ஆளுமை(sovereignty) என்பது வலுவிழப்பது அதிகரிப்பதும், தத்தம் நலன்கள் அடிப்படையில் கூட்டமைப்பை உருவாக்கி சர்வதேச அரசியல்- பொருளாதார சவால்களை சந்திப்பதுமான காலக்கட்டம் இது. உல்க சக்திகளின் நலன்களுக்கு ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகளில் மட்டுமே கருத்து வாக்கெடுப்பும், தனிநாடு உருவாக்கமும் நடைபெறுவதற்கு சன்றுகளாக கிழக்கு தைமூரும், தெற்கு சூடானும் உள்ளன. இந்திய நலன்கள் இலங்கைப் பிரிவதை அனுமதிக்காது. சர்வதேச அரசியலில் இந்தியா, சீனா, மேற்கத்திய அரசுகளின் நல்ன்களுக்கு இடையிலான போட்டிகளுக்கான பகடைக்காயாக மட்டுமே இலங்கை விடுதலைப் போராட்டம் பயன்படும்.
7. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தனிமைப் படுத்தி அடையாளப்படுத்தி தண்டிக்கப்படல் வேண்டும். மாறாக தமிழருக்கு தீங்கு விழைக்கும் சிங்களரை அடையாளப்படுத்தாமல் சிங்கள வெறுப்பைத் தூண்டுவது அக்குற்றவாளிகள் தப்பிக்கவே துணை புரியும். அதே போல் தமிழர்களில் தவறு செய்தவர்கள் தப்பிக்கவே சிங்கள இன வெறி உதவும். ஜே.வி.பி அமைப்பினரும் வி.புவும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டது இல்லை என்பது உண்மையானால் அதுவும் ஆய்விற்குரியதாகும்.
8. தமிழர், சிங்களவர் மத்தியில் இனவெறிக்கு இலக்காகத நடுநிலையாளர்களை ஊக்குவிப்பதன் மூலமே தீர்வு சாத்தியமாகும்.
9. இந்தியாவிலும் அத்தகையோர் ஊக்குவிக்கப்படுவது அதற்கு துணை புரியும் |
|
|
No comments:
Post a Comment