Translate

Saturday 28 July 2012

கிழக்கு, சப்ரகமுவ தேர்தல் குறித்து இவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்களேன்..

கிழக்கு, சப்ரகமுவ தேர்தல் குறித்து இவர்களுக்கு ஏதாவது அறிவுரை சொல்லுங்களேன்..கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதில் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாகாணங்களாக கிழக்கும் சப்ரகமுவவும் காணப்படுகின்றன. கிழக்கில் பூர்வீகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருவதுடன் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களுடன் தொடர்புடைய தமிழர்கள் சப்ரகமுவ மாகாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். 


கிழக்கு, சப்ரகமுவ தேர்தலில் போட்டியிட தமிழ் கட்சிகள் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன. 

மீண்டும் முதலமைச்சர் கனவுடன் பிள்ளையானும் கிழக்கிற்கு முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட முஸ்லிம் கட்சிகளும் வடக்கு, கிழக்கு இணைப்பு கனவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் களமிறங்கியுள்ளன. 

சப்ரகமுவவில் தனித்துவத்தை உறுதிப்படுத்தப் போவதாக சேவல் சின்னத்தில் கூவ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முனைந்து வரும் நிலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவென சில மலையக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஏகோபித்த குரலாக போட்டியிடத் தீர்மானித்துள்ளன. 

இந்த அரசியல் தலைவர்களுக்கு தேர்தல் குறித்து நீங்கள் வழங்கும் அறிவுரை என்ன? http://adaderana.lk/tamil/public_news.php?nid=0&mode=head&nid=29

No comments:

Post a Comment