ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி!
சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 12.08.2012 அன்று டெசோ மாநாடு நடக்க உள்ளது. டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.
இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment