Translate

Friday 10 August 2012

இலங்கை மீது இந்தியா மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடாது: இந்தியாவை இன்றுவரை மறக்காத ஜனாதிபதி மஹிந்த!

இலங்கை மீது இந்தியா மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடாது: இந்தியாவை இன்றுவரை மறக்காத ஜனாதிபதி மஹிந்த! 

அண்டை நாடுகளுடனடான உறவுகள் குறித்து இந்தியா மீளாய்வு செய்யவேண்டுமென சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பிலும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை மீது இந்தியா மெய்யாகவே கரிசனை கொண்டிருந்தால் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடாது என குறிப்பிட்ட அவர் - மாறாக தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டி நாடுகளை தடுத்திருக்கவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்தியா இலங்கைக்குஆதரவாக செயற்பட்டிருந்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்திய வலயத்தின் அண்டை நாடுகளுடன் பேணப்பட்டு வரும் உறவுகள்சரியான முறையில் காணப்படுகின்றதா என்பதனை இந்தியா மீளாய்வு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறெனினும், மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பில் விரிசல் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தின் இந்தியாவின் விருப்பங்களுக்கு மாறாக இலங்கைசெயற்படாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களைமுன்னெடுக்கும் பொறுப்பு முதலில் இந்தியாவிடமே ஒப்படைக்கப்பட்டதாகவும், அது தொடர்பில்இந்தியா அதிக நாட்டம் காட்டவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போதுகுறைந்த விலையில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய சீனா ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகளை சரியாக புரிந்து கொள்ளவேண்டும் எனவும், அவசரப்பட்டு தீர்மானங்களை எடுப்பதில் பயனில்லை எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி அனைத்து தரப்பினருடனும்பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுத் திட்டத்தை எட்ட தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் கட்சியொன்றுடன் தனியாகபேச்சுவார்த்தை நடத்தினாலும் நாட்டின் அதி உயர் தீhமானங்களை நிறைவேற்றும் பாராளுமன்றில்அதற்காக அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமாக தீர்வுத்திட்டம் காண்பது இலகுவானது என அரசாங்கம் கருதுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்றதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு வரவேற்கப்பட வேண்டியது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாக புலி ஆதரவு தரப்பினர் போலியானபிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment