Translate

Saturday, 11 August 2012

இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை!


இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை!

இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை!

அண்டை நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது இந்தியா நிதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 


இந்தியாவில் இருந்து இயங்கும் ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகவியலாளருக்கு அலரி மாளிகையில் வைத்து அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். 

அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

இலங்கை இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே தீர்வு காணப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் பாராளுமன்றின் ஊடாகவே எடுக்கப்படும். 

இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென என வலியுறுத்தி வருகிறோம். 

இனப்பிரச்சினைக்கான தீர்வை ஜனநாயக ரீதியில் காண வேண்டும். 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. 

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் அமுல்படுத்தப்படும். 

70 வீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை. 

2009ம் ஆண்டு டிசம்பரில் 27000 படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 15000ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நெருங்கி உறவு பேணப்பட்டு வருகின்றது. 

இவ்வாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment