“நான் முன்னெடுத்திருக்கிற இவ்வுண்ணாநிலைப் போராட்டத்தில் சர்வதேசத்தை நோக்கி ஈழத்தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். அவை தமிழீழ ஆதரவாளர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படுமா?” என இன்று பத்தொன்பதாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்திவரும் திரு. சிவந்தன் கோபி கேள்வி எழுப்பினார்.
ரெசோ என அழைக்கப்படும் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு தமது மாநாட்டினை வரும் பன்னிரண்டாம் திகதி சென்னையில் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடாத்தவிருக்கிறது. இம்மாநாடு பற்றி திரு. சிவந்தனிடம் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோதே அவர் மேற்படி கேள்வியை பதிலாக வழங்கினார்.
இவ்விடயம் பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், “ரெசோ மாநாடு தொடர்பாக தமிழ் மக்களாகிய நாங்கள் ஒரு தெளிவோடு இருக்கவேண்டும். அதாவது ஈழத்தமிழ்மக்களின் இறையாண்மை விடயத்தில் நாம் எவ்வித விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமில்லாமல் போராடுகிறோம். தமிழனத்தலைவர்களில் ஒருவர் என சொல்லப்படுகிற கலைஞர் கருணாநிதி தமிழீழம் சார்ந்து அதற்கு ஆதரவாக இந்த மாநாட்டை நடாத்துக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் இதுவரைகாலமும் ஈழத்தமிழ் மக்களுக்கு துரோகமிழைப்பவராகவே இருந்திருக்கிறார். 2009இல் சிறிலங்கா அரசபடைகளினால் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது, மக்கள் துடித்துக் கொண்டிருந்த போது, அதனை பார்த்துக் கொண்டு இருந்தார். கண்துடைப்பாக வெறுமனே இரண்டு மணிநேர உண்ணாநிலை போராட்டத்தை நடாத்தினார். முள்ளிவாய்க்கால் அழிவுகள் நடந்த கையுடன் தனது கட்சியைச் சேர்ந்த திருமதி. கனிமொழி உட்பட்ட நாடளுமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்பினார். அவர்கள் இராஜபக்சவின் அமைச்சர்களுடன் கைகுலுக்கிக் கொண்டதுடன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்து கௌரவித்தார்கள். ஆனால் அதே கலைஞர் கருணநிதி இன்றைக்கு தமழீழத்துக்கு ஆதரவாக மாநாடு நடாத்துகிறார்.
இத்தகையவர்களை நம்பி நாங்கள் எந்தக் காரியத்திலும் இறங்க முடியாது, அதே சமயம் அர்ப்பணிப்புகளுடன் போராடிவரும் தமிழ் நாட்டிலுள்ள உணர்வார்களின் மனதையும் நாம் புண்படுத்தக்கூடாது.
பழுத்த அரசியல் வாதியான திரு. கருணாநிதியை கேள்வி கேட்பதன் மூலம் வழிக்கு கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பில் தாயகத்திலிருந்தும், புலம்பெயர்நாடுகளிலிருந்து தமிழ்த் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்வதனை ஏற்க முடியாது. திரும்பவும் ஒரு மாயைக்குள் நாம் விழுந்து கிடக்க முடியாது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதனை தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டார்.
இங்கு திரு. சிவந்தன் குறிப்பிட்ட நான்கு கோரிக்கைகளாவன:
1. இலங்கைத்தீவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும்.
2. தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும், நிலப்பறிப்பு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
3. சிறிலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியற் கைதிகளான போராளிகளை விடுதலை செய்யவேண்டும்.
4. மேற்கு நாடுகளில் அகதி தஞ்சம் கோருபவர்களை திருப்பி அனுப்புவது நிறுத்தப்படவேண்டும்
ஒலிம்பிக்போட்டிகளின் ஆரம்ப நாளில் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு ஒன்று கூடலினைப் போல் நிறைவு நாளான வரும் ஞாயிற்றுக்கிழமை (ஒகஸ்ட் 12ம்திகதி) மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை முன்னர் நடைபெற்றவிடத்தில் Aspen Way (Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக) கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்றினை நடாத்துவதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் ஏற்பாடுகளைச் செய்துள்ளது |
No comments:
Post a Comment