Translate

Friday 10 August 2012

யோசனை வெள்ளம் போல் வழிந்தோடிக் கொண்டு தான் இருக்கிறது ...


சந்தேகமேயில்லை, அம்மாவுக்கு .. ஆரம்பத்தில் நமபவில்லை... நம்பவே முடியவில்லை. இப்போது உறுதியான தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு வரப் போகிறது. வரத்தான் போகிறது. முந்தாநாள் முதல் அரசு தனது காலி மதுபாட்டில் கொள்முதல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் 6,802 மதுக்கடைகள் உள்ளன. இவற்றிற்கு தமிழகத்தில் உள்ள 10
மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து மதுபானங்கள் வாங்கப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பாட்டில்களை மறுசுழற்சி முறையில் பழைய பாட்டில்களை கழுவி சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். இதற்காக ஏஜென்ட்களை நியமித்து தங்கள் நிறுவன பாட்டில்களை கழுவி சுத்தம் செய்து பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் மது விற்பனையால் அரசுக்கு சுமார் 18000 கோடி ரூபாய் வருவாய் வருகிறது. வேறெந்தத் துறையிலும் இல்லாத வருமானம் இது. டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் 6,802 மதுக்கடைகள் உள்ளன. அரசின் எந்த துறை இயங்குகிறதோ இல்லையோ, இந்தத் துறை வெகு ஜோராக இயங்குகிறது. குடித்தண்ணீருக்கு கூட தட்டுப்பாடு உண்டு . ஆனால் இந்தத் தண்ணீருக்கு தட்டுப்பாடு என்பதே கிடையாது. லாரிகளில் பெட்டி பெட்டியாய் வந்து இறங்குகிறது. பெரியவர்கள் என்றில்லை.. இளைஞர்களும், சிறுவர்களும், பெண்களும் கூட குடிக்கத் தொடங்கி விட்டார்கள். சம்பாதிக்கும் காசு வீடு வந்து சேருவதே இல்லை. குடும்பங்கள் தத்தளிக்கின்றன. பல குடும்பங்கள் சிதைவுற்று விட்டன. குடிச் சண்டைகள், கத்திக் குத்து , சாராய சாவுகள், குடித்து விட்டு வண்டிகளை ஓட்டுவதால் நடக்கும் மரணங்கள் , குடியால் ஏற்படும் உடல் பாதிப்புகள், மன பாதிப்புகள், கொலை, கொள்ளை, திருட்டு , செயின் பறிப்பு, கற்பழிப்பு ... எல்லாமே ஒரு சங்கிலித் தொடர் போல... தமிழ்த் சமுதாயத்தை சீரழித்து கொண்டே வந்தன. எங்கே விடிவு என தேடி வந்த வேளையில் சாராய வியாபாரத்தை பெருக்குவது எப்படி என்றே அரசுகள் அதிகாரிகளை கூட்டி விவாதங்களை நடத்தி வந்தன. பல இடங்களில் போராட்டங்கள், ஊடகங்களில் கருத்து போர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வலியுறுத்தல்கள்.. இத்தனைக்கும் மேலே, இன்றைய தமிழக முதல்வர் ஜெயலிதாவின் எண்ண கருத்து ஓட்டம் சிறப்பாக இருக்கின்ற காரணத்தாலோ என்னவோ.. இதோ, மதுவிலக்கு வரலாம் என தெரிகிறது.

ஞாபகமிருக்கிறது .. 2001 இல் ஜெயலிதா முதல்வர்க பதவி ஏற்ற போது அவர் போட்ட முதல் கையெழுத்து மது விலக்கு அரசாணை கோப்பில் தான். பிறகு ஐந்தாண்டுகள் மது இல்லாமல் தான் இருந்தது தமிழகம். பிறகு வந்த கருணாநிதி தான் திரும்பவும் மதுவை கொண்டு வந்து நாட்டை சீரழித்து விட்டார். அவருக்கு அது தான் தெரியும். அவரிடம் வேறு எதையும் எதிர்ப்பார்க்க முடியாது. ஆகவே இப்போது மது விலக்கை கொண்டு வர முடியுமானால் அது ஜெயலலிதாவால் மட்டும் தான் முடியும். அதற்கான திராணியும் துணிச்சலும் இவருக்கு மட்டுமே உண்டு.

மதுவால் இழக்கப் போகும் வருமானத்துக்கு என்ன மாற்று வழி ? என்ற சிந்தனை தான் இது நாள் வரை மதுவிலக்கை அரசு நடைமுறைப்படுத்த முடியாமல் செய்து வந்தது. கருணாநிதியும் இதை தான் சொல்லி சொல்லி தமிழ் நாட்டை அழித்து வந்தார். ஜெயலலிதாவும் இதை நம்பி வந்தார். குஜராத் மாநிலத்தில் மது கிடையாது. ஆனாலும் அங்கே அரசுக்கு உபரி லாபம் செய்ய முடிகிறது. அந்த உபரி லாபத்தை அண்டை மாநிலங்களுக்கு கொடுத்து வட்டி சேர்த்து வாங்குகிறது குஜராத் அரசு. அது எப்படி முடிந்தது என குஜராத் அரசை கேட்டு இருந்தார் ஜெயலிலதா. குஜராத் முதல்வர் நேரேந்திர மோடியும் ஒரு கோப்பினை அனுப்பி இருபதாக தெரிகிறது. அதில் அரசின் வருமானத்தை பெருக்க பல வழி முறைகள் இருப்பதாக தெரிகிறது. அதை முதல்வர் படித்து வருவதாக தெரிகிறது. தமிழ் நாட்டில் 500 கிரானைட் குவாரிகள் இருப்பதாக தெரிகிறது. அது தனியார் எடுத்து கோடிகோடியாக கொள்ளை அடிப்பதும், ஆற்றில் மணல் அள்ளி கோடிகளை குவிப்பதும் ஆராயப்பட்டு வருகிறது. அந்தத் தொழில்களை அரசே எடுத்தால் குடிவிற்பனையால் ஏற்படும் இழப்பை சரி செய்யலாம் எனவும் யோசிக்கப்படுகிறது .. எது எப்படியோ.. மதுவிலக்கை அமுல்படுத்துவதன் மூலம் தான் சார்ந்து இருக்கிற அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆருக்கு அப்போதும், இப்போதும், எப்போதும் தமிழ் மக்கள் மனதில் இருக்கிற ஒரு பேரன்பை போன்ற அன்பை ஜெயலலிதாவும் பெறுவார் என்பதில் சந்தேகமே இல்லை.

வரும் 15ம் தேதி சுதந்திர தினம் அல்லது அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று இதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. அந்த நாளை தமிழகத்தின் பெண்கள் கொண்டாடக் காத்திருக்கிறார்கள். என்றென்றும் மக்கள் மனதில் முதல்வராய் இருக்கக் கூடிய இந்தப் பொன்னான வாய்ப்பை முதல்வர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்....

No comments:

Post a Comment