இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது.
இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தபோது தமிழக அரசு இந்த பதிலை அளித்தது.
நீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ. அன்பழகன் டெசோ மாநாட்டிற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து இருந்தார்.
எவ்வளவுபேர் வருவார்கள் என்று கேட்டபோது சுமார் 8,000 பேர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் முரசொலி பத்திரிகையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் ஏராளமான வாகனங்கள் அங்கு வர வேண்டிய நிலைமை ஏற்படும்.
ராயப்பேட்டை மருத்துவமனைக்கு எதிரே உள்ள ஒய்எம்சி மைதானத்திற்கு அதிக அளவில் வாகனங்கள் வந்தால் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆகவே சென்னையில் மாநாட்டை நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தவிர தமிழகத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் டெசோ மாநாட்டை நடத்திக் கொள்ளலாம் என்றார்.
காவல்துறை முடிவெடுக்கலாம்-நீதிமன்றம்:
இதையடுத்து டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment