விமல் வீரவங்ச குற்றச்சாட்டு
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாதிநிதி போன்றவர்கள் மீண்டும் ஒரு முறை தமிழ் இளைஞர்களிடம் ஆயுதங்களை கொடுத்து அவர்களை அழிவு நோக்கி இட்டுச் செல்ல கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ வாழ்வுரிமை மாநாடு மூலம் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கடும் அழுத்தங்களை கொடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை தோற்கடிக்க இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
30 வருடங்களுக்கு மேலாக செயற்பட்டு வந்த பயங்கரவாத்தை தோற்கடிக்க முடிந்ததாகவும் அவ்வாறான வெற்றியை பெற்ற இலங்கை போன்ற நாட்டுக்கு தமிழீழ வாழ்வுரிமை மாநாட்டின் கொள்கைகளை தோற்கடிப்பது சிரமமான ஒன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே வீரவங்ச இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தோற்கடிக்கப்பட்ட ஈழம் என்ற எண்ணக்கரு, மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இலங்கைக்கு எதிராக பாதிப்புகளை ஏற்படுத்தும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக கருணாநிதி ஈழ மாநாட்டை நடத்தினார் எனவும் மீண்டும் பிரிவினைவாதத்தை தலைதூக்க செய்ய வேண்டும் என்பதே அவரது நோக்கம் எனவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
No comments:
Post a Comment