Translate

Wednesday, 15 August 2012

நிமலரூபன், டெல்றொக்சன் படுகொலைகள் அரச சிறப்புப் படைகளால் ஏவிவிடப்பட்டதற்கு கண்கண்ட சாட்சிகள் உண்டு


மனோ கணேசன்:-
நிமலரூபன், டெல்றொக்சன் படுகொலைகள் அரச சிறப்புப் படைகளால் ஏவிவிடப்பட்டதற்கு கண்கண்ட சாட்சிகள் உண்டு –

தமிழ் அரசியல் கைதிகள் நிமலரூபன், டெல்றொக்சன் ஆகியோரது படுகொலைகள் அர சாங்கத்தினால் ஏவிவிடப்பட்ட சிறப்பு படையினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அதற்கு கண்கண்ட சாட்சிகள் உள்ளனரென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறைச்சாலை படுகொலைகளை கண்டித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையி னை வலியுறுத்தியும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த போராட்டம் இன்று யாழ்.நகரில் இடம்பெற்றிருந்தது, இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தப் படுகொலைகள் தெருவினில் இடம்பெறவில்லை. அரசாங்கத்தின் பாதுகாப்பிலுள்ள சிறைச்சாலையில் இடம் பெற்றிருக்கின்றது. எனவே இதுவொரு திட்டமிட்ட படுகொலை என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.இதேபோல் எங்களுடைய பிரச்சினைகளை அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் கூறிக்கொண்டிருப்பதில் பலனில்லை. எங்கள் இனம் படுகொலை செய்யப்படும்போது, எங்கள் இனத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போது அது அமெரிக்காவுக்கு வலிக்காது, இந்தியாவுக்கும் வலிக்காது ஜரோப்பிய நாடுகளுக்கு வலிக்காது.
எமக்குத்தான் வலிக்கும். எனவே இவற்றுக்கெதிராக நாங்கள்தான் போராடியாகவேண்டும். வடகிழக்கு முழுவதும் போராட்டங்கள் வெடிக்கவேண்டும். இன்று இந்த அரசாங்கம் தமிழர்கள் மீது புரிந்து வரும் காட்டாட்சி சிங்கள முற்போக்கு சக்திகளுக்குப் புரிந்திருக்கின்றது.
இன்று அவ்வாறான தரப்புக்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற போ ராட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கின்றது. அதாவது இவ்வாறான படுகொலைகள் இனிமேலும் இடம்பெறமுடியாது. இவற்றுக்கெதிராக நாம் தொடர்ந்தும் போராடுவோம் என்பதை அது புரிய வைத்திருக்குமென்றார்.

No comments:

Post a Comment