Translate

Thursday 20 September 2012

திருப்பதியில் விநாயகருக்கு 4116 கிலோ லட்டு காணிக்கை: முஸ்லீம் தொழில் அதிபர் வழங்கினார்


திருப்பதியில் விநாயகருக்கு 4116 கிலோ லட்டு காணிக்கை: முஸ்லீம் தொழில் அதிபர் வழங்கினார்
நகரி, செப்.20- 

ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் ஷெரீப். தொழில் அதிபர் இவர். விநாயகர் மீது தீவிர பற்று கொண்டவர். ஆண்டு தோறும் திருப்பதியில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் தும்முலகுண்டா பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தன்னால் முடிந்த காணிக்கைகளை செலுத்துவார். 

நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தும்முலகுண்டாவில் உள்ள விநாயகருக்கு ராட்சத லட்டு தாயாரித்து காணிக்கையாக வழங்க முடிவு செய்தார். இதன்படி விநாயகர் உருவத்தில் 416 கிலோ எடையில் ராட்சத லட்டு தயாரிக்கப்பட்டது. அதை அவர் விநாயகருக்கு வழங்கினார். 

விநாயகர் வடிவ லட்டுவை அங்குள்ள மக்கள் தரிசித்தனர். பின்னர் அந்த லட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. 

ஷெரீப் கூறும் போது, நான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் விநாயகர் மீது தீவிர பற்று உண்டு. அவரிடம் நாம் என்ன கேட்கிறோமோ அதை காலதாமதமின்றி தருவார். கடந்த ஆண்டு விநாயகருக்கு 316 கிலோ எடையில் லட்டு தயாரித்து கொடுத்தேன். கடந்த ஆண்டு முழுவதும் அவர் எனக்கு நிறைய செல்வ வளங்களை தந்தார். முக்கியமாக கவலை எதுவுமின்றி மன நிம்மதியுடன் வாழ வழி ஏற்படுத்தி கொடுத்தார். அதற்கு நன்றிக் கடனாகத்தான் இந்த ஆண்டு 416 கிலோ எடையுள்ள லட்டு தயாரித்து விநாயகருக்கு காணிக்கை செலுத்தினேன் என்றார். 

நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஷெரீப்புக்கு சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ராவ் நேரில் பாராட்டு தெரிவித்தார். அப்போது ஷெரீப்புக்கு போலீஸ், பொதுமக்கள் சார்பில் பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டன.

No comments:

Post a Comment