Translate

Thursday, 20 September 2012

பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்றதமிழர்கள் இலங்கைக்கு விரட்டியடிப்பு

பிரிட்டனில் அடைக்கலம் புக முயன்ற, தமிழர்கள் 50 பேர், மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, வீடுகளை இழந்த ஏராளமான தமிழர்கள், மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். போதுமான வசதி இல்லாததால், பலர் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.இதற்கிடையே, இலங்கையிலிருந்து சமீபத்தில், 50 பேர் பிரிட்டனில் தஞ்சம் அடையச் சென்றனர். 


ஆனால், அவர்களை, பிரிட்டன் எல்லையோர காவல் படையினர், அடைக்கலம் கொடுக்க மறுத்து விட்டனர். இதையடுத்து, இந்த 50 பேரும், தனி விமானத்தில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இன்று இவர்கள், கொழும்பு வந்தடைகின்றனர்.

மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு பயந்து, தஞ்சம் அடைந்தவர்களை, பிரிட்டன் எல்லையோர காவல் படையினர், கண்மூடித்தனமாக திருப்பி அனுப்பியுள்ளது கண்டிக்கத்தக்கது. மீண்டும் இலங்கை திரும்பும் இந்த தமிழ் மக்கள், அந்நாட்டு அரசால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என, பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

http://tamil.yahoo.c...Y3Rpb25z;_ylv=3 

No comments:

Post a Comment