Translate

Thursday, 20 September 2012

இல‌ங்கை தூத‌ரக‌த்தை நாளை மு‌ற்றுகை‌யிடு‌கிறா‌ர் திருமாவளவ‌ன்

ராஜபக்ச‌வி‌ன் இ‌ந்‌திய வருகைக்கு எதிர்ப்பு தெ‌ரி‌வி‌த்து இலங்கை தூதரகத்தை நாளைமுற்றுகையிட‌ப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேச மாநிலத்தில் சாஞ்சி அருகே பவுத்த கல்வி மையம் ஒன்றை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவுக்கு வருகிறார்.


தமிழினத்திற்கு எதிரான இனப்படுகொலையை அரங்கேற்றி, லட்சக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு, எந்த உயிருக்கும் சிறு தீங்கும் இழைக்கக்கூடாது என்று சொன்ன புத்தர் பெயரிலான கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க எந்த அருகதையும் இல்லை.

இந்நிலையில் ராஜபக்சவை இந்தியாவுக்கு அழைத்த பா.ஜ.க.வையும், அனுமதியளித்த காங்கிரஸ் அரசையும் கண்டித்தும், ராஜபக்சவின் வருகைக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் 21ஆ‌ம் தேதி காலை 10 மணியளவில் சென்னையில் இலங்கை தூதரகத்தை விடுதலைச்சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் எ‌ன்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment