அரசியல் விபச்சாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ்: சஜித் பிரேமதாஸ.
இலங்கையில் அரசியல் விபசாரம் நடக்கின்றது. அதனை முஸ்லிம் கங்கிரஸ் இப்போது கெட்டியாக பின்பற்றுகின்றது. இவ்வாறு தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு விபசார அரசியலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் இலங்கையில் தீவிரமாக பின்பற்றுகின்றது என்றே கருத முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று (19) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவிலயலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது அரசாங்கத்துக்கு எதிராகன கருத்துகளையும் குற்றச்சாட்டுகளையும் மிக மோசமாக முன்வைத்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இன்று அதே அரசாங்கத்துடன் சேர்ந்து ஆட்சியமைத்துள்ளது. இதுதான் இலங்கை அரசியலில் தோற்றம் பெற்றுள்ள அரசியல் விபசாரமாகும். அதாவது இது ஒரு விபசார அரசியலாகும்.
தேர்தல் காலத்தில் தங்களால் மக்கள் முன்வைக்கப்பட்ட அனைத்தையும் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டு இப்போது அரசுடன் சேர்ந்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடானது ஓர் ஏமாற்று வித்தை என்பதும் தற்போது வெளியாகி உள்ளது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
No comments:
Post a Comment