அரசியல் தீர்வை வழங்க அழுத்துவார் மன்மோகன்? |
இனப்பிரச்சினைக்குச் சாத்தியமான அரசியல் தீர்வு காணுமாறு, புது டில்லியில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள சந்திப்பின் போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அழுத்தம் கொடுப்பார் என்று புதுடில்லி வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.
சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, மத்தியப் பிரதேச மாநில அரசின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ மூன்று நாள் பயணமாக நேற்றுப் புதுடில்லி சென்றுள்ளார்.
நேற்றிரவு புதுடில்லியைச் சென்றடைந்த அவருக்கு, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்று இராப்போசன விருந்தளிக்கிறார். இந்தத் தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையத் அக்பர்தீன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த இராப்போசன விருந்துடனான சந்திப்பின் போது, இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வு குறித்த விவகாரங்கள் தொடர்பான இந்தியாவின் கரிசனைகள் குறித்து மன்மோகன்சிங் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் இலங்கையில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி மன்மோகன் சிங் அழுத்தம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக ஐ.ஏ.என்.எஸ் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கும்போது இரண்டு முக்கியமான விடயங்களை வலியுறுத்திப் பேச்சு நடத்தவுள்ளார் என அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவிற்குச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல், இந்தியாவில் இலங்கைப் படையினருக்கான பயிற்சிகளைத் தொடர்ந்து பெறல் என்ற இரண்டு முக்கிய விடயங்களையே ஜனாதிபதி ராஜபக்ஷ பிரதமர் மன்மோகனிடம் வலியுறுத்தவுள்ளாரென மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.
"இந்தியாவில் பயணிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக் குள்ளாகியிருக்கிறது. இது எதிர்காலத்தில் இரு நாடுகளுக்குமிடையில் மோசமான நிலைமையை உருவாக்கக்கூடும். இங்கு வரும் இந்தியப் பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு வாணிபத் தொடர்பாடல்கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது.
எனவே, இந்தியப் பிரதமரின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவருவதே ஜனாதிபதியின் முக்கிய பணியாக இருக்கிறது'' என்று மூத்த அமைச்சர் ஒருவர் நேற்று மாலை "உதய'னிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது இந்தியப் பயணத்தின் போது இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கவுள்ளார்.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 20 September 2012
அரசியல் தீர்வை வழங்க அழுத்துவார் மன்மோகன்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment