லண்டனில் நாளை மாலை இந்திய தூதரகத்துக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது !
மகிந்த ராஜபக்ஷ வருகையை கண்டித்து தீக்குளித்து இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் உடல் நேற்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, மதியம் அவர் தீக்குளித்த இடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.
பின்னர் இரவு 7.30 மணியளவில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஈழத் தமிழர்களுக்காக தன்னுயிரை ஈந்த இம் மாவீரனின் நினைவாகவும், மற்றும் இந்திய அரசாங்கம் மகிந்தருக்கு விரித்திருக்கும் செங்கம்பள வரவேற்ப்பினை எதிர்த்தும் நாளை, லண்டனில் உள்ள இந்திய தூதுவராலயத்துக்கு முன்னதாக பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தமிழ் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.நாளை(வெள்ளிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்பாட்டம் மாலை 6.00 மணிவரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment