Translate

Thursday, 20 September 2012

கழுத்தில் சங்கிலியைக் கட்டி அதனை பஸ் சில்லுடன் பிணைத்து போராட்டம் !


கழுத்தில் சங்கிலியைக் கட்டி அதனை பஸ் சில்லுடன் பிணைத்து போராட்டம் !

இன்று மாலை 3.30 மணிக்கு PVT -030 என்னும் இலக்கமுடைய தனியார் விமானம் ஒன்றில், இலங்கைத் தமிழர்கள் ஏற்றப்பட்டு அவர்களை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது பிரித்தானியா. அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட இவர்களை திருப்பி அனுப்பவேண்டாம் எனக்கூறி, வெள்ளையின மக்கள் சிலர் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
சற்று நேரத்துக்கு முன்னர், போரம் வூட் என்னும் இடத்தில் அமைந்துள்ள சிறைக்கு முன்னால் கூடிய வேற்றின மக்கள், தமிழர்களை திருப்பி அனுப்பவேண்டாம் எனக் கோஷமிட்டனர். இவர்களில் ஒருவர், தனது கழுத்தில் இருபுச் சங்கிலியை மாட்டி அதனை பஸ்ஸின் சில்லுடன் பிணைத்து பூட்டிவிட்டார். இதனால் அகதிகளை விமானநிலையத்துக்கு கொண்டுசெல்ல வந்திருந்த வண்டி நகரமுடியாமல் அவ்விடத்திலேயே தரித்து நிற்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது.

இப்போராட்டத்தில் தமிழர்களுக்கு உதவிவரும் ரிம்-மாட்டின் அவர்களின் நண்பர்களும் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்த சிவந்தனும் கலந்துகொண்டுள்ளனர் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.





Send To Friend |    17932 

No comments:

Post a Comment