

ஞாயிறு இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'அனிமல் பிராக்டிஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஓர் குரங்கு என்றால் நம்ப முடிகிறதா? நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும். அதுவும் இது சாதாரண குரங்கல்ல. ஜோர்ஜ் ஒப் த ஜங்கிள், நைட் அட் த மியூசியம், ஹேங் ஓவர் - 2 என 20 படங்களுக்கு மேல் நடித்த கிரிஸ்டல் தான் இப்போது என்.பி.சி சனலின் 'அனிமல் பிராக்டிஸ்' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளையும் களம் இறக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
சினிமா நட்சத்திரங்கள் சின்னத் திரைக்கு வருவது செய்தி அல்ல தான். என்றாலும் சினிமாவில் நடித்த குரங்கு ஒன்று சின்னத்திரைக்கு வந்திருப்பது விநோத செய்திதானே.

http://www.virakesar...ting.php?vid=42
No comments:
Post a Comment