Translate

Saturday 15 September 2012

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் கடித்தார் கோத்தாபய


புலனாய்வுப் பிரிவு அதிகாரிமீதான தாக்குதல் எதிர்பலைகள் ஆரம்பம்
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் கடித்தார் கோத்தாபய –
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக இராணுவப்புலனாய்வு பிரிவில், முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 9 ஆம் திகதி இராணுவப்புலனாய்வு பிரிவின் மேஜர் ஒருவரும், லெப்டினட் ஒருவரும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வரான மாலக்க சில்வாவினால் தாக்கப்பட்டனர்.

இதற்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்காதது சம்பந்தமாக இராணுவப்புலனாய்வு பிரிவில் கோத்தபாய ராஜபக்ஷ எதிரான அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இராணுவப்புலனாய்வு பிரிவினர் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளதுடன் புலனாய்வு பிரிவில் தனக்கு விசுவாசமானவர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இந்த நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அதில் உள்ள கீழ் மட்ட அதிகாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில், ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க ஊடகவியலாளர் சந்திப்பொன்று அடுத்த சில தினங்களில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment