Translate

Saturday, 15 September 2012

வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் என முஸ்லிம் காங்கிரஸிடம், சம்பந்தன் கோரிக்கை


கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது ஜனாதிபதியை தவிர வேறு எவருடனும் தாம் பேசத் தயாரில்லை
  
கிழக்கு மாகாண வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆளும் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதானது வாக்களித்த மக்களுக்கு இழைத்த துரோகமாகவே கருதப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தை எதிர்த்து போட்டியிட்ட காரணத்தினாலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தேர்தல் மேடையில் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளை கடுமையான விமர்சனம் செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பின்னணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்தால் அது வாக்களித்த மக்களை ஏமாற்றுவதாகவே கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியினருக்கு பெரும்பான்மை பலம் காணப்படும் நிலையில், கிழக்கில் ஆட்சியமைக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது ஜனாதிபதியை தவிர வேறு எவருடனும் தாம் பேசத் தயாரில்லை 
 
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பது சம்பந்தமாக ஜனாதிபதியை தவிர வேறு எவருடனும் தாம் பேசத் தயாரில்லை என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
இதனால், அமைச்சர்கள் டளஸ் அழகபெரும, கெஹெலிய ரம்புக்வெல்ல, சுசில் பிரேமஜயந்த இவர்களின் கதைகளுக்கு பதில் கூறவும் தான் தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
 
அதேவேளை இந்த விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி பேசுவதற்கு தாம் தயாராக இருப்பதாக அறிவித்தால், அதற்கு தாம் தயார் என சம்பந்தன் கூறியுள்ளார். கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
 
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசாங்கத்தை விமர்சித்;ததன் காரணமாகவே, கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அந்த கட்சிக்கு வாக்களித்தனர். மாகாண சபை தேர்தலில், அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாத எதிர்க்கட்சி அரசியல்கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்காது மாகாண சபை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் எனவும் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment