SLMC அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு TNAயை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? இணைப்பு 2
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இரத்தாகியுள்ளது.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் பம்பலப்பிடியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் காரியலயத்தில் நடைபெற ஏற்பாடகியிருந்தது.
இந்த பேச்சுவார்தைக்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
இன்றைய கூட்டம் 7 மணியளிவல் ஆரம்பமாகவிருந்த நிலையில் 7 மணிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்திருந்தனர்.
எனினும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் சென்றிருக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா ஹசன் அலியுடன் தொடர்பு கொண்ட போது தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், தாங்களும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், தலைவர் வந்தவுடன் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் தொலைபேசிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் தாமும் பேச்சுவார்த்தையை கைவிட்டு மீண்டும் தமது இல்லங்களுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லையாயின் அறிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கியஸ்த்தர்கள் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு தமிழ்க் கூட்டமைப்பை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா? அல்லது தமிழ்க் கூட்டமைப்பை காத்திருக்க வைத்து கழுத்தறுத்ததா? அல்லது மகிந்த சகோதரர்களி ன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இருந்தார்களா? என விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக தான் மரியாதை வைத்திருக்கும் வயதிலும் அரசியலிலும் மூத்தவரான இரா சம்பந்தனை காத்திருக்க வைத்து அமைச்சர் ஹக்கீம் அவமதித்தாரா என்ற கேள்விகள் பலரிடையே எழுப்பப்பட்டுள்ளன.
கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?
கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்தையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரசின் இறுதி முடிவு நாளைய தினம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வெளியிடப்படவுள்ளது.
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியும் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 15 ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ளது.
11 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் மொத்தமாக 15 ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.
இந்த நிலையில் 7 ஆசனங்களை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இரு தரப்புக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
எனினும் முதலமைச்சர் பதவி தமக்கு தேவை என்ற நிலைப்பாட்டுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தமது யோசனையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் நேற்று இலங்கை அரசதரப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் புதியதொரு ஆட்சியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அமையவுள்ள கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பொறுப்பொன்றும் மு.காவுக்கு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளிவராத நிiலியல் கூட்டமைப்பினருடனான முஸ்லிம் காங்கிரஸின் இந்த சந்திப்பானது வெறும் கண்துடைப்பு நாடகம் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.
http://www.globaltam...IN/article.aspx

No comments:
Post a Comment