Translate

Saturday, 15 September 2012

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம்: த.தே.கூ.


முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத் தொடுவாய் தமிழ்ப் பிரதேசத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் அவர்களுக்கு தமிழ் மக்களுக்குச் சொந்தமான 500 ஏக்கர் வயல் காணிகளைப் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வரு வதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த ஊர் முக் கியஸ்தர்கள் தம்மிடம் முறைப்பாடு செய் து ள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமை ப் பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இது குறித்து பாரளுமன்ற உறுப்பினர் ஆன ந்தன் மேலும் தெரிவிக்கையில், சிங்களக்குடும்பங்களை தமிழர்களுக்குச் சொந்தமான காணிகளில் குடியேற்றுவதற் காக காணிகள் கடந்த சில வாரங்களாகவே நில அளவை செய்யப்பட்டு 200 க்கும் மேற் பட்ட தற்காலிக வீடுகள் அமைக்கப் பட்டி ருக்கின் றன.

அத்துடன் இந்த குடியே ற்றத்திற்காகப் புதிய வீதிகள் அமைக்க ப்பட்டு மின் கம் பங்களும் நாட்டப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளினால் முந்திரிகை க் குளம், ஆமையன்குளம், ௭ரிச்சகாடு உட் பட அந்தப் பகுதியில் உள்ள தமிழ்க் கிராம ங்களில் உள்ள காணிகள் பறிபோயிருந்தன.
தமிழ் மக்களுடைய காணிகள் சிங்களக்கு டியேற்றத்திற்காகப் பயன்படுத்துவது தொட ர்பாக அதிகாரிகளினால் முன்னறி வி த் தல் ௭து வும் வழங்கப்படவில்லை ௭ன்றும் யாரும் அறி யாத வண்ணம் திடீரென இந்த நடவ டி க்கை மேற்கொள்ளப்பட்டு வருகின் றன ௭ன் றும் ஊர்ப்பிரமுகர்கள் ௭ன்னிடம் தெரிவி த்து ள் ளார்கள்.
இந்த சிங்களக்குடியேற்றம் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் நான் தொடர்பு கொண்டு கேட்ட போது இது குறி த்து தனக்கு ௭வரும் அறிவிக்கவில்லை ௭ன் றும் பொது மக்களிடமிருந்தும் முறைப் ப ாடு கள் கிடைக்கவில்லை ௭ன்றும் தெரி வித்தார்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத்திற்குப் பொ று ப்பாகவுள்ள அரசாங்க அதிபருக்கு அறி விக் கா மல் முறையான அவருடைய அனும தி யின்றி கொக்கிளாய் பிரதேசத்தில் இந்த சிங் களக்குடியேற்ற நடவடிக்கைகள் மேற் கொள் ளப்பட்டிருக்கின்றன. இது குறித்து உரிய அரச மட்டத்தினருடன் தொட ர்பு கொ ண்டு நட வடிக்கைகளை ௭டுப்ப தற்கு நாங் கள் முய ற்சித்துள்ளோம்.
இதே வேளை கொக்கிளாய் கோட்டைக் கேணி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவி லில் இராணுவத்தினர் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதாகவும் கோவிலின் உள்ளே இறைச்சி வகைகளைச் சமைப் பதுடன் கோவி லின் ௭ல்லா பகுதிகளிலும் சப்பாத்துக்களு டன் நடமாடி வருவதாகவும் அந்தக் கிராம த்தைச் சேர்ந்த மக்கள் ௭ன்னி டம் தெரிவித் திருக் கின்றார்கள். இந்தப் பகுதி மக்கள் அவர்களுடைய சொந் தக் கிராமங்களில் மீள்குடியேற்ற ப் பட்டு ஒரு வருடமாகின்றது.
ஆனாலும் அங்கு குடி யே றி யுள்ள 200 க்கும் மேற்ப ட்ட குடு ம்ப ங்கள் இன் னும் கொட்டில் களிலும் தறப்பாள் கூட ாரங்களிலுமே வசி த்து வருகின் றார்கள். இவ ர்களுக்கான தற்கா லிக வீடுகள் கூட இன் னும் அமைத்துக் கொடுக் கப்பட வில்லை.
அது மட்டுமன்றி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி க ளும் அரசி னால் செய்து கொ டு க்கப்படவில்லை. இத னால் அந்தப் பகு தி மக்கள் பெரும் கஷ்ட த்திற்கு மத்தி யிலேயே வாழ்ந்து வருகின் றார்கள் ௭ன்றார்.

No comments:

Post a Comment