Translate

Tuesday, 18 September 2012

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, வியாபாரத்திற்காக தொழிலதிபர்கள் குழு இலங்கை செல்லுகிறது.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு, வியாபாரத்திற்காக தொழிலதிபர்கள் குழு இலங்கை செல்லுகிறது.  இந்த முதலாலிகள் தமிழ் மக்களிள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தங்கள் லாபத்துக்காக இலங்கை செல்கிறார்கள். ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே துணிச்சல் இருந்தால், லாப வெறி பிடித்த இந்த தொழிலதிபர்களை நிறுத்தட்டும்....


இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை தமிழீழத் தாயகத்தில் கொன்று குவித்த இலங்கை நாட்டுடன் தொழில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக வரும் 20-ந் தேதியன்று மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர் இலங்கை செல்வதாக வெளியாகி உள்ள செய்தி கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்களின் வேண்டுகோள். இதை ஏற்று தமிழக அரசும் தமிழக சட்டப்பேரவையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்திய மத்திய அரசோ எப்பொழுதும் போல் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி இலங்கையுடன் தொழில் வர்த்தக உறவுகளை விரிவாக்கம் செய்து வருவது தமிழர் நெஞ்சங்களில் எரிமலையால் வெடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் தமிழக தொழில் வர்த்த சங்கத்தின் 45 பேர் கொண்ட குழு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை செல்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழக மக்களின், தமிழக அரசின் உணர்வுகளை உதாசீனப்படுத்திவிட்டு தமிழக தொழில் வர்த்த்தக சங்கத்தினர் இலங்கை செல்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த பயணமானது தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தை அவமதிக்கும் செயல்

No comments:

Post a Comment