Translate

Saturday, 15 September 2012

நீதியமைச்சில் வருவாய் இல்லை- கப்பல் துறைமுகங்கள் அமைச்சு வேண்டும்- ஹக்கீம் அடம்பிடிப்பு


தனக்கு நீதியமைச்சு தேவையில்லை என்றும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தரவேண்டும் என அலரி மாளிகையில் மகிந்த ராசபக்சவை சந்தித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார்.

மேலதிகமாக இன்னும் இரண்டு அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு தரவேண்டும் என்றும் அவற்றில் ஒன்று புனர்வாழ்வு புனரமைப்பு மீள்கட்டுமான அமைச்சு என்றும் மற்றுமொரு வருவாய் தரக் கூடிய அமைச்சையும் தருமாறு ஹக்கீம் கோரியுள்ளார் என அரசதரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நீதியமைச்சில் வருவாய் மிகக்குறைவு என்றும் இலங்கையில் ஒப்பந்தங்கள் வருவாய்கள் தரக் கூடிய அமைச்சாக இருக்கும் கப்பல் துறைமுகங்கள் அமைச்சு தனக்கு தரவேண்டும் என்றும் ஹக்கீம் கோரியிருப்பதாக அரச தரப்பு கூறுகிறது. கப்பல் துறைமுகங்கள் அமைச்சே இறக்குமதி ஏற்றுமதி அனுமதி உட்பட உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களை கையாளும் அமைச்சாகவும் உள்ளது. இதனால் இந்த அமைச்சராகவும் செயலாளர்களாகவும் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கான பணம் கிடைப்பது வழமையாகும்.
இதனால் இந்த அமைச்சை தனக்கு தருமாறு ஹக்கீம் அடம்பிடிப்பதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை திணைக்கள கூட்டுத்தாபனங்களின் தலைவர்களாக முஸ்லீம் காங்கிரஷ் கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் தூதுவர்களாக தமது கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஹக்கீம் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment