அரசாங்கம் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றிக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டி வருவதாக லண்டனிலிருந்து பிரசூரமாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் அதிகாரத்தை விஸ்தரிப்பதல் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
சுயாதீனமான விசாரணைகள் நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணை நடத்தல் ஆகியவற்றைவிடவும் அரசாங்கம் வேறும் விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக அண்மையில் நீதிமன்றத்தின் மீதான அழுத்தங்கள் ஏற்புடையதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்ளைகையுடையோரை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் குறித்தும் அந்தப் பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது. முக்கிய கடல் கேந்திர நிலையங்களை இலக்கு வைத்து சீனா இலங்கையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக லண்டனின் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment