இந்தப் புதிய கட்டுப்பாடுகள் இந்த வருடமே நடைமுறைக்கு வந்துள்ளதால் இனிவரும் அகதிகளிற்கே பல தலையிடிகள் காத்திருக்கின்றன.
2013ம் ஆண்டில் உள்வாங்கப்படும் குடிவரவாளர்களில் அகதிகளின் தொகையான 265.000 பேரில் அங்கீகரிக்கப்பட்டு உள்வாங்கப்படுவோர் தொகை 9,000 ஆகும். கடந்த காலங்களில் குறிப்பாக 2009ம் ஆண்டில் 34,000 பேர் அகதிகளாக விண்ணப்பித்தார்கள் என்பதும் 2013ம் ஆண்டுத் தொகையுடன் ஒப்பிடும் போது 75 வீத விழுக்காட்டால் அகதிகள் தொகை குறைக்கப்பட்டுளளது என்பதும் கண்கூடு.
இனிவரும் காலங்களில் அகதிகளாக வருவோரின் விண்ணப்பங்கள் அதிகூடிய விரைவில் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் அங்கீகரிக்கப்படாவிட்டால் ஒரு வருட காலத்திற்குள்ளேயே திருப்பியனுப்பும் வகையில் சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. அத்தோடு சமூக நலக் கொடுப்பணவுகள், வைத்திய நலச் சேவைகள் என்பன கூட ஏறத்தாள ஒட்டுமொத்தமாக மறுக்கப்படுகின்றன.
ஏதவாது மிகவும் அவசர நோய் அல்லது மற்றையவர்களிற்குப் பயன்படக்கூடிய தொற்றுநோய் உண்டானால் மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்ட வைத்தியசேவைகள் வழங்கப்படுகின்றன. ஆகதியாக வருபவர் 15 நாட்களிற்குள் தனது முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பத்தைத் சமர்ப்பிக்க வேண்டும். 45 நாட்களிற்குள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு விசாரணைகள் இயன்ற விரைவில் பூர்த்தியாக்கப்பட்டுவிடும். அத்தோடு குழுவாக வருபவர்களை 14 நாட்கள் தடுத்து வைக்கவும், நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தி மீண்டும் 6 மாதங்கள் தடுத்து வைக்கவும் வகை செய்யப்படுகிறது.
அத்துடன் இலவச சட்ட உதவிகள் வழங்குவதிலும் பல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் செய்யப்படுவதற்கான காரணமே அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பயணுப்புவற்காவே. ஆகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர் 12 மாத காலத்திற்குள் திருப்பியணுப்பப்பட வேண்டும் என்பதில் கனடிய அரசு திடமான முடிவெடுத்து அதைச் செய்து வருகிறது.
அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் அகதிகள் விசாரணைச் சபையிடம் மீளாய்வு விண்ணப்பத்தை சமர்ப்பிற்பதற்கு பல கடப்பாடுகளை சட்டம் விதித்துள்ளது. எனவே மீளாய்வு என்பது ஒரு பகற்கனவே. ஆனால் சகல அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும் உச்சநீதிமன்றத்தை நாடலாம். ஆனால் அதற்கான தாராள பணத்தைச் செலவளிக்க வேண்டும்.
அகதிக்கோரிக்கை ஏற்கப்பட்டவரோ அல்லது விசாரணைகள் மற்றும் மீளாய்வுகளிற்கு விண்ணப்பித்து விசாரணைகள் 6 மாதங்களிற்கு மேலாகச் செல்கின்றன என்ற காரணத்திற்கு தகுதியுடையவர்களோ அவர்களது விசாரணை முடியும் வரை தற்காலிக வேலை செய்யும் அனுமதிப் பத்திரத்திற்கு தகுதியுடையவர்களாகிறார்கள்.
1999ல் இருந்து 2009ம் ஆண்டு வரையில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியிலும் சிறீலங்காவிலிருந்து வருகை தருபவர்களில் அகதிகளாக அங்கீகரிக்கப்படுவது 77வீதமாக இருந்தது. 100 பேரில் 77 பேர் உடணடியாக அங்கீகாரம் பெறுவரும் மிகுதியுள்ளோரில் பெரும்பாண்மையினர் மீளாய்விற்கு விண்ணப்பித்து அகதிகளாக அங்கீகரிக்கப்படுவதும் நடைமுறையிலிருந்தது.
ஆனால் 2009ம் ஆண்டுப் போரின் முடிவின் பின் இந்தத் தொகை பெருமளவு சரிந்து அங்கீகரிக்கப்படுவோர் தொகை குறைந்து விட்டது. ஆனால் இப்போது எல்லாமே தலைகீழ்.
இந்த மாற்றம் அவுஸ்திரேலியாவில் அகதிகள் விவகாரத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தையொத்த கடுமையானதொரு மாற்றம் என்றாலும் இந்த அகதிகள் தொடர்பான மாற்றங்களை வெளியிட்ட கனடியப் பிரதமர், கனடியக் குடிவரவு அமைச்சர், கனடிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் அந்த அறிவிப்புக்களை தமிழர்கள் அண்மையில் கனடாவிற்கு வந்த கப்பல்களின் மேல்த்தளத்தில் இருந்தே பத்திரிகையாளர்களிற்கு விடுத்தனர்.
கப்பல்களையும் அகதிகளையும் குழுமமாக அனுப்பியவர்களிற்கே கனடாவின் இந்த அகதிகள் பற்றிய புரிந்துணர்வு மாற்றத்தின் பெருமை போய்ச் சேரும்.
-கனடா மிறர்-
|
No comments:
Post a Comment