
பிரான்ஸ் ல் சில தினங்களாக வதிவிட அனுமதி இன்றி வாழும் பல தமிழர்கள் இரவோடு இரவாக காணமல் போன சம்வங்கள் அதிகரித்துள்ளது …இதனை அடுத்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர் ..!!உறவினர்கள் நண்பர்கள் தொலைந்தவர்களை தேட ஆரம்பித்தனர் சிலர் காவல்துறை அலுவலகங்களையும் நாடினர் ….அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது ..!!!
ஆம் அவர்கள் உறவினர்கள் இலங்கை தொலைபேசி இலக்கங்களில் இருந்து பேசியதுதான் ..ஆம் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டு இருந்தனர் …!வதிவிட அனுமதிபத்திரம் முடிவடைந்து காலாவதியான பின்பும் இருந்தவர்கள் காவல்துறையினர் புகையிரத நிலையங்கள் வேலை தளங்களுக்கு செல்லும் போதும் கைது செய்யப் பட்டவர்கள் ஒரு சில நாட்களில் ஒருவருக்கும் தெரியாமலே நாடு கடத்தப் பட்டு இருந்தனர் …..
அந்த வகையில் ஈழ தமிழர்களான =தகப்பனும் மகனும் சேர்த்து நாடு கடத்தப் பட்ட சம்வம் ஒரு கிழமைக்கு முன்பு நடந்துள்ளது புகையிரத நிலைய பகுதியில் கைது செய்யப் பட்ட தகப்பனும் மகனும் இரு நாட்களிலே உடனடியாக நாடு கடத்தப் பட்டு இருந்தனர் …உறவினர்கள் இங்கு தேடி அலைய அவர்கள் ஒரு கிழமைக்குபின்பு இலங்கையில் இருந்து அழைப்பை மேற்கொண்டு தங்களுக்கு நடந்தவற்றை விபரித்தனர் இதனை அங்கு இருப்பவர்களுக்கும் தெரியப் படுத்துங்கள் என்றும் ….அதைப் போன்றே மற்ற சில இளைஞ்சர்களுக்கும் வேலைகளுக்கு செல்லும் பொது புகையிரத நிலையங்களில் வைத்து கைது செய்து ஓர் இரு நாட்களில் நாடு கடத்தப் பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது …..தமிழர்களே விழிப்பாக இருங்கள் வதிவிட அனுமதி அற்ற மக்களே உங்களை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள் …….வதிவிட அனுமதி அற்றவர்களை கவனமாக தெரியாமல் நாடு கடத்துகின்றது இந்த அரசாங்கம் …..
நன்றி
ஈழப்பிரியன்
No comments:
Post a Comment