புலம்; பெயர்ந்து வாழும் தமிழீழ மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்விமான்களால் தமிழர் மேம்பாட்டுப் பேரவை உருவாக்கப்பட்டு அதனுடைய தலைமையகம் பிரான்ஸில் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் கிளைகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழச் சிறார்களின் தமிழ் மொழியறிவையும், கலை பண்பாடுகளையும் மேம்படுத்தும் முகமாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்விக் கூடங்கள்; நிறுவப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நாடுகளிலும் புலம்பெயர் தமிழர்களால் நிறுவப்பட்டிருக்கின்ற தமிழ்க்கல்விக்கூடங்கள் என்கின்றபோது ஒட்டுமொத்தமாக அதன் எண்ணிக்கை இன்று ஆயிரத்தைத் எட்டும்நிலையிலிருக்கிறது. இதிலிருந்து தமிழீழமக்கள் கல்விக்கும், கலாச்சாரத்திற்கும் கொடுக்கின்ற முக்கியத்துவத்தினை உலகம் புரிந்துகொள்கிறது.
ஆனால் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் இரண்டாந்தலைமுறையினரின் இ;ந்த வளர்ச்சியும், இக்கல்விக்கூடங்களினூடாக உருவாக்கப்படுகின்ற தமிழ்த்தேசிய ஒருமைப்பாடும், சிங்கள தேசத்தின் வயிற்றில் புளியைக்கரைக்கத் தொடங்கிவிட்டது. இதனால் தான் கடந்த 4 ஆம் திகதி உலகளாவிய ரீதியி;ல் உலகத்தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் தமிழ் மொழித்திறன் பரீட்சை நடத்தப்பட்டது.
தமிழ்க்கல்விக் கூடங்களுடாக அனைத்துலக ரீதியில் நடாத்தப்பட்ட இ;ப்பரீட்சையை மேற்குலகம் உன்னிப்பாகக் கவனித்ததோடு ஈழத்தமிழரின் மொழிப்பற்றினை பாராட்டவும் செய்தது. ஆனால் இவ் தமிழ் மொழித்திறன் பரீட்சையை சிங்கள தேசம் தனக்கெதிராக உருவாகும் மிகப்பெரிய சவாலாகவே பார்க்கிறது. இதனாலேயே ஸ்ரீலங்காவின் பேரினவாத ஊடகங்கள் யாவும் புலம்பெயர் தேசங்களில் புலிகள் நடாத்தும் பரீட்சை என்றும், இக்கல்விக்கழகங்களுடாகவே விடுதலைப்புலிகள் நிதி சேகரிப்பதாகவும் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இதிலிருந்தாவது சிங்கள தேசத்தின் மனோபாவம் எவ்வகைப்பட்டது என்பதனை உலகம் புரிந்து கொள்ளுமா?
கடந்த 4ஆம் திகதி நடாத்தப்பட்ட அனைத்துலக ரீதியிலான பரீட்சையில் பிரித்தானியாவில் மட்டும் 50ற்கு மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் 3062 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியிருந்தனர். பரீட்சை நிலையங்களில் நேரடியாகப்
பார்த்தபோது எமது சிறார்களின் மொழியறிவும், ஆர்வமும், தேசப்பற்றும் ஒருமைப்பாடும் பார்ப்பவர்களை வியக்கவைத்தது.
No comments:
Post a Comment