Translate

Friday, 10 June 2011

தொழில் செய்ய அனுமதியுண்டு; ஆனால் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது! பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தவிர்ந்த மற்றைய நாடுகள் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து தொழில்நிமித்தம் வருபவர்கள் நிரந்தரமாக குடியுரிமை பெறுவதை குறைப்பதற்கான பிரேரணையொன்றை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனின் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இந்தியத் துறைசார் தொழிலாளர்கள் அதாவது வீட்டுவேலைகளுக்காக அமர்த்தப்படும் தொழிலாளிகளே இந்த தீர்மானத்தால் பாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 



அறிவுக்கூர்மையான மற்றும் சிறந்த தொழிலாளர்களையே பிரித்தானியா எதிர்பார்க்கின்றது. இவர்கள் எமது நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு பங்களிப்புச்செய்ய வேண்டும். 

அதேவேளை இவர்கள் தொழில் புரிய மாத்திரமே இங்கு வரவேண்டும். அதன்பின் தமது சொந்த நாட்டிற்கு திரும்பிவிட வேண்டும் என்று குடிவரவு அமைச்சர் டெமியன் கிரீன் தெரிவித்தார். 

பிரதமர் டேவிட் கெமரூன் அரசாங்கத்தின் இத்தீர்மானம் தொடர்பாக இணைந்த குழுக்கள் கருத்துத் தெரிவிக்கையில், 

“வெளிநாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு நிரந்தரமாக இங்கு தங்குவதற்கு அனுமதியளிக்கப்படமாட்டாது. அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு இவர்கள் குடியேற்றப்படலாம்” என்றனர். 

இந்த தீர்மானத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக உயர்திறன்வாய்ந்த குடியேற்ற பேரவையின் Amit Kapadia தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment