நேற்றைய தினம் பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழர்களுக்கான தொழிற்கட்சியின் செயலாளராக விளங்கும் திரு சென் கந்தையா அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். இலங்கையில் இறுதிப்போரில் கொல்லப்பட்ட 40,000 பேர்களை நினைவுகூர்ந்த அவர், உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 2 வருடங்கள் ஆகியும் அங்கே காணமல் போதல் நிற்கவில்லை எனவும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவும் இல்லை என்றும் தெரிவித்தார். தொழில் கட்சி பிரித்தானியாவில் ஆட்சியில் இருந்தபோது 2013ம் ஆண்டு நடக்கவிருக்கும் காமன்வெலத் போட்டிகளின் கூட்டம் இலங்கையில் நடக்கக்கூடாது என தெரிவித்திருந்ததாகவும் ஆனால் தற்போது ஆட்சியில் இருகும் அரசு அதனைக் கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்......... read more
No comments:
Post a Comment