இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டதற்கு பின்னர் அதன் மீதான அழுத்தங்களை சில PR கம்பெனிகள் மேற்கொள்வதாக சனல் 4 செய்திப் பிரிவின் இயக்குனரின் கருத்துக்களை மேற்கோள் காட்டி த கார்ட்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
அரசியல்வாதிகள் போன்ற பிரபலங்கள் PR கம்பெனிகள் எனப்படும் பொது உறவுகளை மேம்படுத்தும் தனியார் நிறுவனங்களுடனான தொடர்பை பயன்படுத்தி அவர்களுக்கு பெரும் தொகையான பணத்தை கொடுப்பதன் மூலம் தாங்கள் விரும்பியவாறு மறைமுக தாக்குதல்களை மேற்கொள்வதாகவும்,
இவற்றில் கணினிகளை ஹேக் செய்தல் மற்றும் தொலைக்காட்சிகளை நெறிப்படுத்தும் நிறுவனங்களுக்கு முறைப்பாடு என்பவையும் இடம்பெறுவதாக தெரியவருகிறது.பிபிசியின் பனராமா எனும் நிகழ்ச்சிக்கும் இதே போன்ற அழுத்தங்கள் பிரயோகிக்கபடுவதாகவும் தெரியவருகிறது.
மேலும் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கும் இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சுக்கும் நேரடித் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை மீதான அபகீர்த்தியை தடுக்க இவ்வாறான மறைமுக செயற்பாடுகளில் ஈடுபடுவதாக மேலும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment