Translate

Friday, 21 October 2011

தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை விரைவில் பதில் அளிக்க வேண்டும் : அமெரிக்கா

அளிக்க வேண்டும் எனவும், இதை செய்ய தவறுமாயின் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்க கூடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு இலங்கை அரசாங்கம் விரிவாக பதில்  அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மார்க் டோனர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,


இலங்கையானது தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நிலைப்பாட்டில் உள்ளது. இலங்கை அரசின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நவம்பர் 15ம் திகதி வெளியிடப்பட்ட பின்னர், அமெரிக்கா இது தொடர்பிலான தனது நிலைப்பாட்டை முன்வைக்கும்.

பல்லின மக்கள் வாழும் இலங்கை போன்ற நாட்டில், இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை அவர்கள் எதிர்பார்ப்பார்களாயின், இந்த பிரச்சினைகளுக்கு அவர்களே தீர்வை தேடுவது அவசியமானது. இதனை இலங்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கிறேன்

என தெரிவித்தார்.
இதேவேளை 2010 ஆண்டு இறுதியில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை 2013 ஆம் ஆண்டு இறுதிவரை அமெரிக்காவினால் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் வர்த்தக திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment