நம்மை அடக்கி வைத்ததால் தான் இன்று அடக்க முடியாத சிறுத்தைகளாக வளம் வந்து கொண்டிருக்கிறோம். நம்மை எந்த அளவுக்கு அமுக்கி அமுக்கி வைக்கிறார்களோ அந்த அளவுக்கு நாம் வளர்கிறோம் என்று தான் அர்த்தம் . இதை ஏன் நான் சொல்கிறன் என்றால், நாம் இன்று கவனிக்க வேண்டிய விஷயம். விடுதலை சிறுத்தைகளின் பிரச்சாரத்தை எந்த ஒரு ஊடகமும் பிரசுரிக்கவில்லை. அப்படி என்றால் விடுதலை சிறுத்தைகள் பிரச்சார்த்திர்க்கே செல்லவில்லையா?
மற்ற கட்சிகளெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு அதை தருகிறோம், இதை தருகிறோம் என்று
பணத்தால் மக்களின் ஓட்டை பணத்தால் வாங்க முற்படுகின்றனர். ஆனால் சிறுத்தைகள்
மட்டும் தான் சொந்த வியர்வையை மட்டும் பயன்படுத்தி கடும் வெயிலிலும் மக்களை
சந்திக்கின்றனர். இதை எந்த ஊடகமும் சொல்லவில்லை. நமக்குள் ஏதாவது உட்கட்சி
பிரச்னை என்றால் ஆளாளுக்கு போட்டி போட்டு எழுதுவானுங்க, ஆறு வாரம்
எழுதுவானுங்க. அதற்ககெல்லாம் சிறுத்தைகள் அஞ்சமாட்டார்கள்.
2002 யில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி க்கு செல்லக்கூடாது என்றார்கள், மீறி
சென்றோம், மேலவளவு செல்லக்கூடாது என்றார்கள் மீறி சென்றோம், சென்னையில் பேரணி
நடத்தக்கூடாது என்றார்கள் மீறி நடத்தினோம், பிரபாகரன் படத்தை
பயன்படுத்தக்கூடாது என்றார்கள் சேரியில் சாதாரண தலித்தும் துணிந்து கையில்
தூக்கி பிடித்தான். 2004 யில் கடலூரில் திருமாவளவன் கால் வைக்கக் கூடாது
என்றார்கள் ஆனால் திருமாவளவன் எங்கள் செல்லப்பிள்ளை என்பது போல 2,25,540
வாக்குகளை வாரி வாரி வழங்கினார்கள். அந்த தேர்தலில் அ.தி.மு.க மற்றும் பா. ஜ.க.
வையும் டெபாசிட் இழக்க வைத்தோம் எந்த ஒரு பெரிய கட்சிகளின் துணையும் இல்லாமல்.
அப்படி ஒரு அக்கினி பரிச்சை தான் நமக்கு இப்போது நடக்கிறது.
சாதாரண ஐ .ஜே.கே. க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமக்கு
கொடுப்பதில்லை.2,25,540 வாக்குக்களை ஒரு நடிகன் பெற்றுந்தால் ஆக ஓகோ என்று
எழுதியிருப்பார்கள். ஆனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயம் வளர்ந்து விடக்கூடாது
என்பதில் எல்லாரும் கூட்டணி.
நமக்கு இதர தகுதிகள் கிடையாது ஆம்லேட் போட தெரியாது ( அதாவது
தொப்புளில் ஆம்லேட் போட தெரியாது, தொப்புளி பம்பரம் விட தெரியாது) உண்மையை
உண்மையாக உரத்த சொல்லும் தைரியத்தை மட்டும் பெற்றுள்ளோம்.
சிறுத்தைகளே ஒற்றுமையாய் இருப்போம். ஊடகம் இல்லா நம் தலைமைக்கு நாமே ஊடகமாய்
இருப்போம். உள்ளாட்சி தேர்தலில் நம் உழைப்பை உறுதி படுத்துவோம்.
2011 விடுதலை சிறுத்தைகள் ஆண்டு என்பதை நிருபிப்போம்...................
அடக்க அடக்க ஆர்ப்பரிப்போம்
அமுக்க நினைத்தால் அடித்து ஒழிப்போம்.....................
அதிகாரமும், ஜனநாயகமும் எவருக்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ
அவைகளை அனைவரையும் ஒன்றினைப்பதுவே
தொல். திருமாவளவனின் லட்சியப் பயணம்.................................
அவர் காலடி தடம் பார்த்து வழி தொடர்வோம்..................
என்றும் எழுச்சி தமிழரின் எழுச்சிப் பாதையில்
தமிழன்வேலு
அங்கனூர்
9962326297
No comments:
Post a Comment