தாயக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை தமிழீழப் பரப்பெங்கும் காற்றோடு காற்றாகக் கலந்து, உதிரத்தை உரமாக்கி, உடல்களை விதையாக்கி ஐப்பசி மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களான. முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதி, இலங்கை இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்தலெப் கேணல் விக்ரர், இந்திய இலங்கை கூட்டுச் சதியால் பலாலி சித்திரவதை முகாமில் தமிழீழ விடுதலைப் போராட்ட மரபுகளுக்கு உட்பட்டு, நஞ்சு அருந்தி வீரகாவியமான லெப் கேணல்களான குமரப்பா, புலேந்திரன், உள்ளிட்ட பன்னிரு மாவீரர்களுக்கும். மற்றும் சிங்கள இன வெறியர்களின் விமானத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கும். வெளித்தெரியாத விடிவெள்ளிகளானகரும்புலி மறவர்கள் உட்பட. ஐப்பசி மாதத்தில் வீரச் சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்குமான வீர வணக்க நினைவேந்தல் நிகழ்வு எதிர் வரும் சனிக்கிழமை (15 ,10 , 2011 ) அன்று பிரித்தானியா தமிழர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், கிழக்கு லண்டன் ஈஸ்ட்காம் பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த மாவீரர்களின் வணக்க நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு உங்கள் அஞ்சலிகளை செலுத்துவதோடு. இந்த மாவீரர்களில் இலச்சியக் கனவுகளை நிறைவேற்றுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.முக்கிய அறிவித்தல்:
தாயாக விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள், மதிப்பளிப்பு நிகழ்வு ஒன்றும் அடுத்த வாரங்களில் நடத்துவதர்க்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் வணக்க நிகழ்வு நடைபெறும் மண்டபத்தில் அன்றைய தினம் மாவீரர் குடும்பங்களின் விபரங்களும் சேகரிப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதால் இந்தப்பகுதிகளில் வாழும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் தமது பதிவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.
கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்புகொண்டும் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
தூயவன்: 07411332990
திவாகர்: 07956903978
வணக்க நிகழ்வு நடைபெறும் முகவரி:
PLASHET SCHOOL
PLASHET GROVE,
EASTHAM,
LONDON,
E6, 1DG
காலம்: 15 ,10 , 2011 சனிக்கிழமைPLASHET GROVE,
EASTHAM,
LONDON,
E6, 1DG
நேரம்: மாலை 6 மணிமுதல் 8.30 வரை
No comments:
Post a Comment