தமிழ் இளையோர் அமைப்பினால் கடந்த ஏப்ரல் மாதம் வெற்றிகரமாக நடாத்தபட்ட உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த மாநாட்டைத் தொடர்ந்து லெஸ்டர் மாநிலத்தில் வாழும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இவ் வாய்ப்பினை நீடிப்பதற்கு கல்வி மற்றும் தொழில் அபிவிருத்தி சபை முடிவெடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மாநாட்டின் விபரங்கள் கீழ்வரும் இணைப்பில் காணலாம் :
http://www.tamilguardian.com/ article.asp?articleid=3091
இந்த நிகழ்வானது மாணவர்கள் தங்கள் வருங்கால கல்வித்துறையை தேர்ந்தெடுப்பதற்கும் மேலும் ஏனைய துறைகளைப் பற்றிய விளக்கங்களைப் பெறுவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இது முக்கியமாக GCSE மாணவர்களை இலக்காகக் கொண்டும் மற்றும் sixth form, பல்கலைகழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தேர்வுகளை பற்றிய தவல்களை வழங்குவதற்கும் நடத்தப்படுகிறது.
இது தவிர, தங்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி மற்றும் வேலை வாய்புகளை பற்றி அறிந்து ஆலோசனை பெறுவதற்கு பெற்றோர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
கல்வியை பெரும் சொத்தாகக் கருதும் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதில் நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். தமிழ் இளையோர்களின் எதிர்காலம் வெற்றிகரமாக அமைவதிலும் அவர்கள் சரியான பாதையில் பயணிப்பதற்காகவும் ஐக்கியராட்சிய தமிழ் இளையோர் அமைப்பு மிகுந்த அக்கறை கொண்டு இந்த உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த மாநாட்டை நடத்துகிறது. மாணவர்களும் பெற்றோர்களும் இதில் பங்கேற்று பயன்பெறுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறது.
--
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மாநாட்டின் விபரங்கள் கீழ்வரும் இணைப்பில் காணலாம் :
http://www.tamilguardian.com/
இந்த நிகழ்வானது மாணவர்கள் தங்கள் வருங்கால கல்வித்துறையை தேர்ந்தெடுப்பதற்கும் மேலும் ஏனைய துறைகளைப் பற்றிய விளக்கங்களைப் பெறுவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கும். இது முக்கியமாக GCSE மாணவர்களை இலக்காகக் கொண்டும் மற்றும் sixth form, பல்கலைகழக மாணவர்களுக்கு வழங்கப்படும் தேர்வுகளை பற்றிய தவல்களை வழங்குவதற்கும் நடத்தப்படுகிறது.
இது தவிர, தங்களின் பிள்ளைகளின் எதிர்கால கல்வி மற்றும் வேலை வாய்புகளை பற்றி அறிந்து ஆலோசனை பெறுவதற்கு பெற்றோர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
கல்வியை பெரும் சொத்தாகக் கருதும் ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதில் நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். தமிழ் இளையோர்களின் எதிர்காலம் வெற்றிகரமாக அமைவதிலும் அவர்கள் சரியான பாதையில் பயணிப்பதற்காகவும் ஐக்கியராட்சிய தமிழ் இளையோர் அமைப்பு மிகுந்த அக்கறை கொண்டு இந்த உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த மாநாட்டை நடத்துகிறது. மாணவர்களும் பெற்றோர்களும் இதில் பங்கேற்று பயன்பெறுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறது.
நன்றி
சஞ்சய்
தமிழ் ஊடக ஒருங்கிணைப்பாளர்
--
Media Team
Tamil Youth Organisation - United Kingdom

Follow us: http://twitter.com/#!/TYOUK
Web: http://www.tyouk.org
No comments:
Post a Comment