Translate

Wednesday, 16 November 2011

வாக்காளர் மீள்பதிவு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 15.11.2011

வாக்காளர் மீள்பதிவு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 15.11.2011 யாழ். கிரீன் கிராஸ் விடுதியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற யுத்தத்தால் தேர்தல் என்பதே மக்கள் மனதில் இருந்து மறைந்து போயிருந்தது.



 யுத்த காலத்தில் தமிழர் பிரதேசங்களில் தேர்தல் நடத்தப்பட்ட போது அவை புறக்கணிக்கப்பட்டன அல்லது குண்டுத்தாக்குதல்கள் மூலம் குழப்பப்பட்டன. இதனால் இன்னமும் மக்கள் தேர்தல் நடவடிக்கை களில் இருந்து ஒதுங்கியே வாழ்கின்றனர்.அத்துடன் இன்னமும் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியாமல், தம் சொந்த இடங்களுக்கு போக முடியாமல் அடிப்படை வசதிகள் அற்று வாழ்கின்ற மக்கள் வாக்களிப்பது பற்றிச் சிந்திப்பது என்பது இயலாத விடயம்தான்.


 இவ்வாறு நீண்டகாலமாக வாக்களிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்ட மக்கள் இனிவரும் காலங்களில் தமது ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காகவேனும் வாக்களிக்கும் பண்பினை வளர்க்க வேண்டும். வாக்குரிமையின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு பிரஜையும் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். வாக்காளர் பட்டியலில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தவறான செயலாகும். அவர்கள் இலங்கை பிரஜைகள்தான் என்றார்.

No comments:

Post a Comment