Translate

Sunday, 6 November 2011

அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கியதான மாவீரர் நாள் அனுஷ்டிப்பே உணர்வுபூர்வமானது:


அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கியதான மாவீரர் நாள் அனுஷ்டிப்பே உணர்வுபூர்வமானது:
[Sunday, 2011-11-06 10:47:23]

ஊடக உறவுகளே வணக்கம்!
தமிழீழ மக்களினது மாத்திரமன்றி, உலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரினதும் பொதுநாளான மாவீரர் நாளை இந்த ஆண்டும் சிறப்பாகவும் உணர்வெழுச்சியுடனும் கடைப்பிடிக்க உலகத் தமிழ் இனம் தயாராகிவிட்டது. இம்முறை, மாவீரர் நாளை சிறப்புற நடத்த பொதுக்கட்டமைப்புக்களை ஏற்படுத்தி, மக்கள் பிரதிநிதிகள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் என, அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கி,
எல்லோருடைய பங்குபற்றுதலுடன், பொதுமையாக அதனை நடாத்துவதென இணக்கம் காணப்பட்டது. அதன் அடிப்படையில், பிரான்சில் மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு, மாவீரர்நாளை சிறப்புற நடாத்துவதற்கான வேலைத்திட்டங்களை அது முன்னெடுத்துவருகின்றது.
பிரான்சில், தாயகத்தில் இடம்பெறுவதுபோன்று, திறந்தவெளிமைதானத்தில், இந்நிகழ்வை நடாத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளிலும், மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழுகள் அமைக்கப்பட்டு, எல்லோரையும் உள்வாங்கி, இந்நிகழ்வை மக்களின் நிகழ்வாக நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வுகள் குறித்த சுவரொட்டிகள், விளம்பரங்களை, அனுப்பிவைக்கின்றோம். இவற்றை தயவு செய்து உங்கள் ஊடகங்களில் வெளியிட்டு, உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழர் நடுவம் - பிரான்ஸ்.

No comments:

Post a Comment