Translate

Sunday 13 November 2011

வேம்படி மாணவி வேனுமா இல்லை சுண்டுக்குழி மாணவி வேணுமா ?

 பொலிசாரின் தார்மீக அனுசரணையும் இந்த லாட்ஜுக்கு உள்ளதாம். 


யாழ் நகரப் பகுதியில் இயங்கிவரும் விபச்சார விடுதிகளில் தலைசிறந்த விடுதி எது என்று கேட்டால் "சுமங்கலி லாட்ஜ்" என்று எந்த இளைஞரும் கூறும் அளவுக்கு பேர்போன லாட்ஜ் அது. ஆணும் பெண்ணும் தங்க தலா 500 ரூபா என இது வசூலிக்கிறது. அதுமட்டுமல்லாது இதனை நடத்தி வந்த "ரஞ்சன்" என்பவர் வரும் வாடிக்கையாளரிடம் சுண்டுக்குழி வேண்டுமா இல்லை வேம்படி வேணுமா இல்லை காண்வென்ட் வேனுமா என்று வேறு கேட்ப்பாராம். 



அங்கே வரும் பெண்கள் உண்மையான மாணவிகள் அல்ல. அவர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்ற அந்தந்த பள்ளிக்கூட சீருடைகளில் வருவது வழக்கமாம். இதனை நடத்திவந்த ரஞ்சன் என்பவர் ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் இரகசிய அணுசரணையைப் பெற்றவர். சுமங்கலி லாட்ஜ் தொடர்பாக அதிர்வு இணையம் சில வாரங்களுக்கு முன்னரே பல தகவல்களைத் திரட்டி விட்டது.

லாட்ஜ் அமைந்திருக்கும் வீதிக்குச் சென்று புகைப்படங்களை எடுக்க முற்பட்டவேளை எமது நிருபரை சிலர் மடக்கி பின்னர் அச்சுறுத்தி விடுவித்தும் உள்ளனர். பொலிசாரின் தார்மீக அனுசரணையும் இந்த லாட்ஜுக்கு உள்ளதாம். அவ்வீதியில் அதிகம் நடமாடினாலேயே சில குண்டர்கள் வந்து அவ்வீதியில் திரியவேண்டாம் என அச்சுறுத்துவது வழக்கம். இவ்வளவு வெளிப்படையாக இந்த விபச்சார விடுதி இயங்கிவந்தும் இதனை யாழ் மாவட்ட மேயரால் அல்லது பெண்கள் மற்றும் கலாச்சாரம் குறித்து வாய்கிழிய பேசிவரும் திருமதி இமெல்டா சுகுமாரின் அதிகாரிகளால் இதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னைப் பற்றி வெளிநாட்டு இணையங்கள் எழுதும் செய்திகளை மட்டும் தேடித் தேடிப் படித்து அதற்கு எதிர் கருத்து கூறிவரும் யாழ் மேயர் மற்றும் அரச அதிபர் இமெல்டா உள்ளூரில் நடக்கும் இவ்விடையங்களைக் கோட்டைவிட்டு விட்டனர். தெரிந்தாலும் நடவடிக்கை எடுக்கப் போகிறார்களா என்ன ?

பின்னர் எவ்வாறு இக் கைதுகள் இடம்பெற்றது ?

அதாவது நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை 13.11.2011) இரவு சுமங்கலி லாட்ஜை முற்றுகையிட்ட பொலிசார் உரிமையாளர் ரஞ்சன் உட்பட 13 பேரைக் கைதுசெய்துள்ளனர். 8 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அவ்வேளை அங்கே இருந்ததாக யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக ஒரு விபச்சார விடுதி பொலிஸாரினால் முற்றுகையிட்டு அங்குள்ளவர்களைக் கைது செய்திருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. இது எவ்வாறு நடந்தது ? கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே இந்த லாட்ஜ் குறித்த செய்திகளை யாழில் இருந்து இனந்தெரியாத நபர்கள் சிலர் அதிர்வுக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து மேலதிக தகவல்களைத் திரட்ட நாம் முற்பட்டவேளை இச் செய்திகள் சில உள்ளூர் ஊடகங்களுக்கும் கசிந்துள்ளது. இந்த விடையம் செய்தியாக வர இருப்பதை பொலிசாரும் புலனாய்வுப் பிரிவினரும் 3 தினங்களுக்கு முன்னரே அறிந்துள்ளனர். அப்பகுதிக்கு சிலர் தொடர்ச்சியாகச் சென்று புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்ததால் அலேட்டானா சிலர் இத் தகவலை சொல்லவேண்டிய இடத்துக்குச் சொல்லியுள்ளனர்.

இதனை அடுத்து வேறு வழி இல்லாமல் இறுதியாக பொலிசார் அங்கே புகுந்து அனைவரையும் கைதுசெய்துள்ளனர். தாம் பெரிய ஒரு ஹீரோ போல நாடகமாடியும் உள்ளனர். 5 பெண்களையும் 7 ஆண்களையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்ற பொலிசார் உரிமையாளர் ரஞ்சனை மட்டும் காரில் ஏற்றி சொகுசாக கூட்டிச் சென்றுள்ளனர் என்றசெய்தியும் எமக்கு கிடைத்துள்ளது. இவரை சிலகாலம் கண்துடைப்புக்காக சிறையில் போட்டுவிட்டு பின்னர் விடுவிப்பார்கள் என்பது யாவரும் அறிந்ததே. வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களை குறைகூறி அதனூடாக தமது அரசியலை முன்னெடுத்துவரும் இமெல்டா போன்ற அரச அதிகாரிகள் தமது கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும். யாழில் கலாச்சாரச் சீர்கோடுகள் முற்றாக இல்லாமல்போகும். யாழில் மட்டும் மேலதிகமாக இன்னும் 6 லாட்ஜ் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. அதன் விபரங்களும் விரைவில் வெளியிடப்படும். சுமங்கலி லாட்ஜ் முற்றுகையால் மற்றைய 7 லாட்ஜுக்கும் இனிக்கொண்டாட்டம் தான். ஆனால் அது நிலைக்காது !

அதிகாரிகளை அமர்த்தி தன்னைப் பற்றி என்ன செய்திவருகிறது என்று ஆராய்ந்துவரும் சில உயர் அரச அதிகாரிகள் காலாச்சார சீர்கேடுகள் குறித்தும் கொஞ்சம் ஆராயலாமே செய்வார்களா இனி ?



பின் குறிப்பு: யாழ் மாவட்ட ஆளுனரான சந்திர சிறி அவர்களின் வாகன ஒட்டுனர் இவ்விடுதியின் வழமையான வாடிக்கையாளராம். இவர் இந்த விடுதிக்கு அடிக்கடி சென்றுவருவது பலரால் அவதானிக்கப்பட்டு உள்ளதாகவும் அறியப்படுகிறது.

No comments:

Post a Comment