Translate

Sunday, 13 November 2011

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் . த.தே.கூ


எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கம் திட்டத்தை முன்வைக்க வேண்டும். அடுத்த பெப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரும் போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து சிறீலங்காவின் இரட்டைத்த வேடத்தை வெளிப்படுத்துவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் . த.தே.கூ


எதிர்வரும் 16ஆம் திகதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் மிக உறுதியாக எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கம் திட்டத்தை முன்வைத்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தெரிவிக்க இருக்கிறோம் என்றார்.
எதிர்வரும் 16 ஆம் நாள் அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவார்ததை தொடர்பாக கருத்துத் தொவிக்கையில் இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வை எட்டுவதாக இருந்தால் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை என பலம் வாய்ந்த சக்திகளின் ஆதரவை நாம் திரட்டுவது அசியமாகும். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் நடந்த மூன்று நாள் சந்திப்பிலும் உயர்நிலை அதிகாரிகள், மற்றும் அமெரிக்க வெளிவிவகார கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து எமது மக்களின் நிலையையும் விருப்பத்தையும் தெளிவாக கூறியிருக்கிறோம்.
எங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் படை எமது பிரதேசங்களிலிருந்து வெளியேற வேண்டும், எமது நிலத்தில் எந்த அச்சுறுத்தலும் இன்றி எமது மக்களை அவர்களது பிரதிநிதிகள் ஆளும் உரிமையைத்தான் நாங்கள் கோரி நிற்கிறோம், மற்றும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சிறிலங்கா காலத்தை கடத்தி வருகிறது போன்ற விடயங்களை நாம் அவர்களுக்கு தெளிவு படுத்தியிருக்கிறோம்.
எமது விடயங்களை கேட்டுக்கொண்ட அமெரிக்க கனடா, மற்றும் பிரித்தானிய, சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையை நடத்துமாறு, தீர்வை நோக்கி வெற்றிகரமாக நகர்வதற்கு சில ஆலோசனைகளையும் அவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த பெப்ரவரி மாதத்தில் நாம் மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு வர இருக்கிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் 47நாடுகளில் முக்கிய நாடுகளின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டிருக்கிறோம். எதிர்வரும் 16 ஆம் நாள் அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவார்ததை தொடர்பாக விளக்கவுள்ளோம் என்றார்.
இதேவேளை, மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களின் விடுதலை தொடர்பாக கொண்டிருக்கும் அக்கறையை எண்ணி நாம் மகிழ்ச்சியடைகிறோம். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் ஈழத்தில் இருக்கும் தமிழ் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க கூடாது.

No comments:

Post a Comment