தனிச் சிங்கள சட்டமே இன முரண்பாட்டுக்கு காரணம் : சந்திரிகா
இலங்கையில் பாரிய இன முரண்பாடுகள் ஏற்பட ஆங்கிலேயர் கையில் இருந்து ஆட்சி பொறுப்பேற்கப்பட்டதன் பின் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே காரணம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வொஷிங்டன் சென்றுள்ள சந்திரிகா ஹவார்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொழிற்கல்வியில் சம உரிமை கோரிய தமிழ்ப் பேசும் சிறுபான்மை சமூகத்திற்கு பாரிய ஒரு தடையாக தனிச் சிங்களச் சட்டம் அமைந்ததாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிய அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாக்கப்படுவதன் அவசியத்தை சந்திரிகா குமாரதுங்க தனது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
இவருடைய தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா செய்த வேலையே 1956 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமாகும். இதன் மூலம் தமது குடும்பம் இழைத்த தவறை சந்திரிகா ஒப்புக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment