Translate

Thursday, 10 November 2011

லண்டனில் இருந்து யாழ் வந்தவர் வாகன விபத்தில் உயிரிழப்பு !


லண்டனில் இருந்து யாழ் வந்தவர் வாகன விபத்தில் உயிரிழப்பு !
லண்டனிலிருந்து உறவினர்களுடன் விடுமுறையைக் கொண்டாட யாழ்ப்பாணம் வந்தவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை புத்தளம் கருவலகஸ்வெல பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ். நெல்லியடியிலிருந்து வந்த குறித்த நபரின் உறவினர்கள் அவரை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த வேளையில் அவர்கள் பயணித்த வான் பிறிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லண்டனில் இருந்து வந்த யாழ். கரவெட்டியைச் சேர்ந்த தியாகராஜா செல்வரூபன் என்ற 34 வயது நபர் உயிரிழந்ததோடு படுகாயமடைந்த சிறுமி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மேலும் ஐவர் புத்தளம் வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக கருவலகஸ்வௌ பொலிஸார் தெரிவித்தனர்

No comments:

Post a Comment