எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரால் கணக்கு வழக்குத் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்க முடியாமல் இன்னொரு அமைச்சரின் உதவியை நாடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை நேற்று நாடாளுமன்றில் அமைச்சர் ஒருவருக்கு ஏற்பட்டது.
ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸநாயக்க நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கா ஜயரத்னவிடம் மிஹின்லங்கா விமானசேவை நிறுவனத்தின் இலாபம் நஷ்டம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தெளிவில்லாத வகையில் பதிலளித்தார். அதாவது கோடிக்காணக்கான ரூபா தொடர்பான கணக்கை தட்டுத் தடுமாறிக் கூறினார்.
அமைச்சரின் பதில் தெளிவில்லாததனால் அநுரகுமார எம்.பி அதனை மில்லியன்களில் கூறுமாறு அமைச்சரைக் கேட்டார்.
அமைச்சர் தடுமாறிப் போனார். நிலைமையைப் புரிந்து கொண்ட மற்றொரு அமைச்சர் அருகில் வந்து மில்லியன்களில் பதிலளிக்க உதவினார். பதிலளிக்க உதவிய அமைச்சர் எஸ்.பி திஸநாயக்க சிரித்துக்கொண்டே தனது ஆசனத்துக்கு சென்று அமர்ந்து கொண்டார்.
No comments:
Post a Comment