Translate

Saturday, 12 November 2011

போரினால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் இயங்காது இருக்கும் உறவுகளுக்கு வாழவைப்போம் அமைப்பு கட்டில்கள் அன்பளிப்பு


போரினால் பாதிக்கப்பட்டு இடுப்பிற்கு கீழ் இயங்காது இருக்கும் உறவுகளுக்கு வாழவைப்போம் அமைப்பு கட்டில்கள் அன்பளிப்பு
வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது பெருமளவான மக்கள் படுகாயமடைந்து இடுப்பிற்கு கீழ் இயங்கமுடியாது படுத்த படுக்கையான நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து அவலப்படுகின்றனர். இவர்களில் மாற்றுவலுவுள்ளோர் சங்க தெரிவின்படி 10 பேருக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு சிறிதரன் பா.உ. ஆதரவில் கட்டில்கள் வழங்கியுள்ளது.

வன்னியில் நடத்தப்பட்ட பெரும்போர் காரணமாக ஏராளம் பேர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர்.அதிலும் உழைக்கும் வலுவுள்ள பலர் உடலில் ஏற்பட்ட கடும் காயங்கள் காரணமாக மாற்றுவலுவுள்ளவர்களாக மாறியுள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் இடுப்புக்கு கீழ் இயங்காதவர்களாக படுத்த படுக்கையான நிலையில் பெரும் துன்பத்தை சுமந்துள்ளனர். அவர்கள் சீரான வீடுகளும் வசதிகளும் மருத்துவத்திற்கான பண வசதியும் இல்லாத நிலையில் வலிகளோடு வாழ்ந்து வருகின்றனர்........... read more 

No comments:

Post a Comment