ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வு!!
அடையாள உண்ணா விரதம்!
இந்த வருடம் மாவீரர் நாளை இரண்டு பிரிவுகளாக நடாத்துவதை கண்டித்தும், வழமை போல் மாவீரர் நாளை ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும், மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த திரு உருத்திராபதி சேகர் அவர்களும், திரு ஜெயசங்கர் முருகையாவும் ஒரு அடையாள உண்ணா விரதம் இருப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள்.
காலம்: எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 15.11.11 அன்று
நேரம்: காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரையும்
மாவீரர்களின் குடும்பங்களே!
எல்லோரும் புரிந்துகொள்ள முடியாத உணர்வுகளை உங்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதால்தான் குறிப்பாக உங்களை நோக்கி இந்த அழைப்பு விடப்படுகின்றது. நீங்களும் சேகரையும், ஜெயசங்கரையும் போலவே சொந்த சகோதரங்களை, பிள்ளைகளை, உறவுகளை இந்த உன்னதமான விடுதலைப் போராட்டத்தில் இழந்து இருக்கிறீர்கள். இந்த உண்ணா விரதத்தில் நீங்களும் கலந்துகொண்டு உங்களின் ஆதங்கத்தினை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், அத்துடன் மாவீரர் நாளின் தாற்பரியத்தினை உணர்ந்து கொண்ட அனைவரும் இதில் கலந்து கொண்டு தமிழர்களின் ஒற்றுமைக்கு வலுச் சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!!!
தொடர்புகட்கு: ruthira.sekar@hotmail.co.uk and jeya_shankar@hotmail.com
No comments:
Post a Comment