Translate

Tuesday 1 November 2011

அகதிகளுக்கு எதிரான C-4 மசோதா


அனலை நிதிஸ் குமாரன்
சட்டவிரோதமாக ஆட்களைக் கனடாவுக்குள் அழைத்து வருபவர்களுக்கு எதிராகவேதான் C-4 மசோதா பாவிக்கப்படும் என்று அறிவித்தது பழமை தழுவும் அரசுஅகதிகளைகட்டுப்படுத்துவதன் நோக்கமே இப்புதிய சட்டம் என்பது தற்போது தெட்டத்தெளிவாக தெரிகிறதுஹார்ப்பர் தலைமயிலான அரசு தற்போது பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளதன்காரணமாக குறித்த மசோதா அடுத்த சில வாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்று கூறுகிறார்கள் அரசியல் அவதானிகள்.

இப்படியானதொரு நிலையிலையேதான் கனேடிய மக்கள் குறித்த மசோதாவுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதன் மூலமாக கவர்னர் அவர்களினால் வழங்கப்படவிருக்கும் ஒப்புதலைதடுத்து நிறுத்தலாம்இம்மசோதா அமுலுக்கு வந்தால் உண்மையான அகதிகளே பல வகையிலும் பாதிக்கப்படுவார்கள்குறித்த மசோதா சட்டமாக்க்பட்டால் பல அகதி விண்ணப்பம்செய்யபட்டவர்கள்கூட பாதிக்கப்படுவார்கள்
கனடா என்கிற நாடு வேறு நாடுகளிளிருந்து வந்து குடியேறியவர்களினால்தான் கட்டப்பட்டது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்கனடா என்கிற தேசத்தின் பூர்வீகக் குடிகள்என்பவர்கள் சிவப்பு இந்தியர்கள் என்கிற மக்களேஇவர்கள் நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆசியாவிலிருந்து வந்து குடியேறினவர்கள்தான் என்பது இங்குகுறிப்பிடத்தக்கது
அகதிகளினால் வளர்த்தெடுக்கப்பட்ட நாடே கனடாஉலகிலேயே கனடாதான் அகதிகளுக்கு சிறந்த சலுகைகளை அளித்து அவர்களுக்கு தேவையான வசதிகளை கொடுத்து வந்ததுஎன்பது எவரினாலும் மறுக்க முடியாதுஇப்படிபட்ட கனேடிய மண்ணின் வாசனையை அழிப்பதற்கு வழிவகுக்கும் C-4 போன்ற மசோதாக்களை வேரிலையே களைந்துவிடவேண்டும்
தனது கொள்கைக்கு உயிர் கொடுக்க முனையும் ஹார்ப்பர்
வந்தேறி குடிகளுக்கு எவ்வித சலுகைகளும் அளிக்கக்கூடாது என்கிற வகையில் கடந்த காலங்களில் பேசிவந்தவரே ஸ்டீபன் ஹார்ப்பர்வெள்ளையினத்தவரைத் தவிர கனேடியமண்ணில் வேறு எவரும் வாழக்கூடாது என்கிற மனப்பாண்புடையவரே ஹார்ப்பர்இவர் இதனை வெளிப்படையாகச் சொல்லாமல் விட்டாலும் இதுவே அவருடைய தனிப்பட்டகருத்துஇப்படிப்பட்டவரின் தலைமையிலேதான் பழமை தழுவும் கட்சி ஆட்சி செய்கிறதுஇவருடைய கருத்துக்கு ஒப்புதலான பலரேதான் தனது அரசின் அமைச்சர்களாகவைத்துள்ளார்
பழமை தழுவும் கட்சி மீண்டும் ஆட்சி ஏறினால் தமிழர்களுக்கு சாபக்கேடாகவே இருக்கும் என்று பல கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தலின்போது ஆரூடம்கூறினார்கள் அரசியல் ஆய்வாளர்கள்தமிழர்களுக்கு மட்டுமல்ல புதிதாக கனடா வந்து குடியேற எண்ணும் அனைவருக்குமே பழமை தழுவும் கட்சியினால் பிரச்சினை இருக்கப்போகிறது என்று அடித்து கூறினார்கள் குறித்த ஆய்வாளர்கள்
கனடாவிற்கு அகதிகளாக வருவோரை தடுக்கவும்கப்பல்களில் அவர்களை கடத்திக் கொண்டு வருவோரை தடுக்கவும் C-49 எனும் மசோதாவை பழமை தழுவும் கட்சி கடந்தவருடத்தில் தயாரித்து அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முற்பட்ட வேளையில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பினால் இது கிடப்பில் போடப்பட்டதுதாம்மீண்டும் ஆட்சியேறினால் நிச்சயம் C-49னை சட்டமாக்கப் போவதாக பிரச்சாரம் செய்து வந்தார்கள் பழமை தழுவும் கட்சியினர்இது சட்டமானால்கனடாவுக்கு குடியேறஎண்ணுபவர்கள் தமது கனவை மறந்துவிட வேண்டும் என்று அன்று கூறப்பட்டது
ஹார்ப்பர் தலைமயிலான ஆட்சி கலைக்கபட்டதன் காரணமாக மார்ச் 2011-இல் குறித்த மசோதா குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.  தேர்தல் பிரச்சாரங்களில் குறித்த மசோதாவைமீண்டும் உயிர்ப்பிப்பேன் என்று அடித்துக் கூறினார்கள் பழமை தழுவும் கட்சியினர்பெரும்பான்மை பலத்தை பெற்று மீண்டும் ஆட்சியமைத்தார் ஸ்டீபன் ஹார்ப்பர்C-49 மசோதாதூசு தட்டப்பட்டு C-4 என்கிற பெயரில் ஜூன் 2011-இல் பாராளுமன்றத்தில் சமர்ப்;பிக்கப்பட்டதுவிவாதங்கள் அனைத்தும் நிறைவேறியுள்ளது.  இதன் நகல் கவர்னர் அவர்களுக்குசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இவருடைய ஒப்புதல் கிடைத்தவுடன் குறித்த மசோதா சட்டமாக்கப்படும்.
பாதிப்புக்கு உள்ளாகப்போகும் உண்மையான அகதிகள்
C-4 மசோதா சட்டமாக்கப்பட்டால் உண்மையான அகதிகள் உட்பட பெண்களை மற்றும் குழந்தைகளை விளக்கமறியலில் வைக்கவே உதவும்குறித்த மசோதா சட்டமாக்கப்பட்டால்அரசிற்கு பல அதிகாரங்களை அளிக்கும்சர்வாதிகார ஆட்சியாளர்களிடம் எப்படியெல்லாம் அதிகாரங்கள் அளிக்கப்பட்டு இருக்கிறதோ அவைகள் அனைத்தும் கனேடிய மத்தியஅரசிற்கு வழங்கப்படும்கனேடிய சட்ட யாப்பை உதாரணமாக எடுத்து வழக்காடுமன்றம் சென்று வாதாடும் உரிமைகள் அனைத்தும் இச்சட்டத்தின் மூலமாக அறவேஒழிக்கப்படுகிறது
இந்த மசோதா மனித கடத்தல்காரர்களுக்கு எதுவும் செய்யவில்லைகுறித்த மசோதாவைப் பற்றி எதுவும் கூறாமல் வெறும் கடத்தல்காரர்களுக்கு எதிராகவேதான் குறித்த சட்டம்பாயும் என்கிற வகையில் கூறிவிட்டு அப்பாவி அகதிகளையே குறி வைக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லைகுறித்த மசோதா இரண்டு வகுப்பு அகதிகளைஉருவாக்குவதுடன் அதிகாரிளுக்கு பல்வேறு வகையான அதிகாரங்களைக் கொடுக்கும்அவையாவனமீள்பார்வையின்றி மறியலில் ஓரு குடும்பத்தை ஓராண்டிற்கு வைத்திருத்தல்;புனர் விசாரணை மனு முறைமைக்கு மறுப்பு விரும்பியபடி நடமாடுவதற்கு கட்டுப்பாடுமற்றும் குடும்பம் மீண்டும் சந்திப்பதைக் கட்டுப்படுத்தல்.
இந்த மசோதா கனடாவின் அதி உயர் சட்ட யாப்பில் வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரங்களையும்இ சர்வதேசச் சட்டத்தையும் மீறுவதுடன் அடிப்படை மனிதாபிமானமும் அற்றதுஎன்று அடித்து கூறுகிறார்கள் கனடாவின் பழம்பெரும் அரசியல் கட்சியான தாராளவாதக் கட்சிகனேடிய மக்கள் ஹார்ப்பர் தலைமையிலான பழமை தழுவும் கட்சிக்குஆதரவளித்தது குறித்த மசோதாவுக்கு ஆதரவாக இல்லை என்பதை மட்டும் இவ்வரசு உணர வேண்டும்மீண்டுமொரு சிறுபான்மை அரசு வருவதன் காரணமாக மீண்டும் ஒருதேர்தல் மிக விரைவில் வரும்இதனை கனேடிய மக்கள் ஒருபோதும் விரும்பவில்லைஹார்ப்பர் தலைமையிலான அரசு பல்வேறு விடயங்களில் சிறந்து விளங்கியதன்காரணமாகவும்தான் மக்கள் இவருடைய கட்சிக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்தை கொடுத்தார்கள்.
உண்மையான அகதிகளுக்கு பாதிப்பு வருமேயாகவிருந்தால் ஹார்ப்பர் தலைமையிலான பழமை தழுவும் கட்சி எதிர்காலத்தில் ஆட்சிக் கட்டிலேற முடியாது என்பதனை ஹார்ப்பர்உணர வேண்டும்தனக்கு மக்கள் அளித்த பெரும்பான்மை பலத்தை சாதகமாக வைத்து சர்வாதிகார ஆட்சியை நடத்தலாமென்று ஹார்ப்பர் நினைத்தால் அது தப்புக்கணக்காகவேதான் முடியும்.
அகதிகளைக் குறிவைக்கும் C-4 மசோதாவை சட்டமாக்க ஒவ்வொரு கனேடிய குடிமகனும்ஃகுடிமகளும் இடமளிக்கக்கூடாதுஇதனை ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து மக்களும்ஒருமித்த குரலில் அணிதிரண்டு தமது ஆதங்கங்களை தெரிவிப்பதன் மூலமாக குறித்த மசோதா சட்டமாக்கப்படுவதிலிருந்து தோற்கடிக்கப்படும்
அகதிகளாக வந்து குடியேறிய நாம் கனேடிய குடிமக்களாக அங்கீகாரம் பெற்றுவிட்டோம் ஆகவே எதற்காக நாம் போராட வேண்டும் என்கிற நிலையை அகற்றி நாம் அனுபவித்ததுனபங்களையே மற்றவர்களும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே அவர்களும் நாம் அனுபவிக்கும் உரிமைகள் கிடைக்க ஆதரவாக இருக்க வேண்டும்இதற்கு ஒரேவழிC-4 என்கிற மசோதா சட்டமாவதற்கு முன்னரே தோற்கடிக்கப்படுவதே சாலச் சிறந்தது.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றனதொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

No comments:

Post a Comment