Translate

Sunday 4 December 2011

அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது! - உள்துறை அமைச்சகம்

அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது! - உள்துறை அமைச்சகம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாத எவரும் இனி வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுத் தங்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குடிமக்களாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிப் பதிவு செய்யாதவர்கள் எதிர்காலத்தில் நடைபெறும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவோ, வாக்களிக்கவோ தகுதியற்றவர்களாகவே கணிக்கப்படுவார்கள். எனவே, உங்கள் உங்கள் பகுதிகளிலுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளையோ அல்லது அவர்களது அலுவலர்களையோ தொடர்பு கொண்டு விண்ணப்பிப்பதன் மூலம் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 

அத்துடன், நிதி வழங்கல் முறைகளிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு டொலர் வரித் திட்டத்தில் இணைந்து கொள்ளாதவர்கள், தேர்தல் ஒன்றில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முன்வரும்போது, அதனை முற்றாகச் செலுத்தியவராக இருக்க வேண்டும். அப்படி, முழுத் தொகையையும் செலுத்தாதவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் குடிமக்களாகக் கருதப்பட மாட்டார்கள் எனவும் உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- நாதம் ஊடக சேவை

No comments:

Post a Comment