Translate

Thursday, 15 December 2011

நத்தார், புதுவருடம் என்று நாம் கொண்டாடும் வேளையில் எமது தாயகத்தில் இருக்கும் எமது சிறுவர்களுக்கும் உதவும்படி வேண்டி நிற்கிறோம்

நத்தார், புதுவருடம் என்று நாம் கொண்டாடும் வேளையில் எமது தாயகத்தில் இருக்கும் எமது சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் முன் வந்து உதவும்படி வேண்டி நிற்கிறோம்!

நாமும் அங்கிருந்தால் கை, கால், கண், பெற்றோர், சகோதர்களை  இழந்திருபோம்.  எமக்கு யாரும் உதவ மாட்டார்களா என்று ஏங்கிக்  கொண்டிருப்போம்!

ஆகையால் தயவு செய்து ஒவ்வொருவரும் பணத்தை செலவு செய்யும்போது 
அதில் ஒரு சிறு பகுதியை ஒதுக்கி உதவ முன் வரவேண்டும்! 


எமது தாய் நிலத்தை அன்னியன் ஆக்கிரமிக்கிறான், நாமும் மௌனமாக 
இருந்துவிட்டால் இன்னும் சில மாதங்களில் எமது முழு சந்ததியையும் 
அழித்து விடுவான். அதற்கு பின் ஆர்பாட்டம் செய்வதிலோ, அழுது  புலம்புவதிலோ 
பயன் இல்லை!

எஞ்சி இருப்பவர்களை நாம் பாதுகாத்தால், தான் நம் தமிழ் இனம் தளைக்கும்!

இது உலகளாவிய ரீதியில் நடை பெற வேண்டும் என்று விரும்பும் ஒரு 
புலம் பெயர்ந்து வாழும் தமிழன்!

No comments:

Post a Comment