தமிழர்களை சிறீலங்காவிற்கு திருப்பியனுப்ப வேண்டாம் எனக்கோரி இன்று (15-12-2011) சிறைச்சாலையின் முன் வீதிமறிப்பில் ஈடுபட்டோரை பிரித்தானியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!
இன்று பிரித்தானியாவில் இருந்து 50 இலங்கையர்களை நாடுகடத்துவதற்காக கீத்துறூ விமான நிலையத்துக்கு அருகாமையில் உள்ள சிறைச்சாலையில் அடைத்துவைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த வேளையிலேயே ACT NOW அமைப்பினரால் அச்சிறைச்சாலையின் முன் திடீர் வீதிமறிப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது.
9 பேர் மட்டும் துணிச்சலாக மேற்கொண்ட இப்போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி கைத்தொலைபேசி ஊடாக குறும் தகவல் செய்திகள் அனுப்பப்பட்ட போதும் போதிய மக்கள் அவ்விடத்திற்க்கு செல்லாத காரணத்தால் மக்கள் பலமின்றிய போராட்டத்தை இலகுவாக பிரித்தானியக் காவல் தூறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளதோடு, நாடுகடததுவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை பின் வாசல் வளியாக விமான நிலையம் அழைத்துச்செல்லப்பட்டும் உள்ளனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த இப் போராட்டம் பலனற்ற நிலையில் பிரித்தானியக் குடிவரவுத் திணைக்களத்தினால் இன்று சிறீலங்காவிற்கு அனுப்பப்படும் 50 பேரில் அடங்கியுள்ள தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக அப் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த ACT NOW அமைப்பினர் கடந்தமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான இரண்டு வருடங்களாக தமிழர்களுக்கு நீதிகோரியும், சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீரல்களையும், படுகொலைகளையும் கண்டித்தும், பல போராட்டங்களை நடாத்திவருவதும், இவ் அமைப்பில் ஒரு சில தமிழர்களஇ தவிர ஏனயவர்கள் வேற்றினத்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment