Translate

Friday, 2 December 2011

பிரிட்டனில் கத்தி வெட்டுக்குள்ளாகி இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

பிரிட்டனில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கத்தி வெட்டுக்குள்ளாகிய நிலையில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரிட்டன் லிவர்பூல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே குறித்த நபர் கழுத்தில் வெட்டுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார். 



உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவரை, முகமூடி நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதை அந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒளிப்படக் கருவி மூலம் அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment